

தொலைக்காட்சி நடிகை பிரதியுஷா தற்கொலை வழக்கில் அவரது காதலர் ராகுல் ராஜ் சிங்கை கைது செய்ய வரும் 18-ம் தேதி வரை மும்பை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
நீதிபதி மிருதுளா பத்கர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அதேசமயம், பங்குர்நகர் காவல் நிலையத்தில் ராகுல் தினமும் ஆஜராகி கையொப்பமிட வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
தொலைக்காட்சி நடிகை பிரதியுஷா கடந்த 1-ம் தேதி வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவரின் காதலர் ராகுல் உடனான பிரச்சினையே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. ராகுல் மீது தற்கொலைக்குத் தூண்டிய தாக வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.