

வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக நேற்று (திங்கள்கிழமை) மாலை 5 மணியளவில் மருத்துவமனையின் நுரையீரல் நோய் சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். பின்னர் இரவு 10 மணியளவில் இதயம் மற்றும் நரம்பியல் நோய் சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
அவருக்கு கடுமையான காய்ச்சலும், மூச்சு திணறலும் ஏற்பட்டுள்ளதோடு நிமோனியா நோய் அறிகுறிகளும் தென்படுவதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.
மருத்துவ நிபுணர் குழு அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறது. அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனையின் மூத்த மருத்துவர் ஒருவர் கூறினார். மேலும், சுஷ்மாவுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக சிறப்பு மருத்துவர் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.