ராஜ்நாத்-காரத் புகைப்பட சர்ச்சை: மம்தா பானர்ஜி மீது வழக்கு பதிவு

ராஜ்நாத்-காரத் புகைப்பட சர்ச்சை: மம்தா பானர்ஜி மீது வழக்கு பதிவு
Updated on
1 min read

ராஜ்நாத் சிங், பிரகாஷ் காரத் இருவரும் இணைந்திருப்பது போன்ற புகைப்படம் வெளியானது தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் உள் ளிட்டோர் மீது பாஜக மற்றும் மார்க் சிஸ்ட் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திரிணமூல் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் அண்மையில் ஓர் புகைப்படத்தை வெளியிட்டார். அதில் உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் பிரகாஷ் காரத்துக்கு இனிப்பு வழங்குவது இடம் பெற்றிருந்தது.

ஆனால், இதை மறுத்துள்ள பிரகாஷ் காரத் தான் ராஜ்நாத்தைச் சந்திக்கவே இல்லை. திரிக்கப்பட்ட புகைப்படத்தை வைத்து தனது அரசியல் புகழுக்கு களங்கம் விளைக்கும் முயற்சி என குற்றம்சாட்டினார்.

இதுதொடர்பாக அவர் டெரிக் ஓ பிரையன் மீது காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

ராஜ்நாத் சிங் இடம்பெற்ற புகைப்படம் சித்தரிக்கப்பட்டது எனக் கூறி, பாஜக தரப்பிலும் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, டெரிக் ஓ பிரையன் மற்றும் சுப்ரதா பக் ஷி ஆகியோர் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து இப்புகாரை கொல்கத்தா போலீஸார் வழக்காக பதிவு செய்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in