

புதுடெல்லி: பிரதமர் மோடியின் செயல்பாடு சிறப்பாக இருப்பதாக உத்தர பிரதேசத்தில் 75% சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
உத்தரப் பிரதேசம், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலங்களில் இன்னும் ஒரு மாதத்திற்குள் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், இந்தியா டுடே ‘மூட் ஆஃப் தி நேஷன்’ கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளது. மூட் ஆஃப் தி நேஷன் என்பது இந்தியா டுடே குழுமத்தால் ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் நாடு தழுவிய ஆய்வு ஆகும்.
தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் பிரதமர் மோடியின் செயல்பாடு சிறப்பாக இருக்கிறதா என்ற கேள்விக்கு ஆம் என கருத்துக் கூறியவர்கள்:
உ.பி. - 75%
பஞ்சாப்- 37%
உத்தரகாண்ட்- 59%
மணிப்பூர்- 73%
கோவா- 67%
எந்தெந்த மாநிலங்களில் எந்தெந்தத் தலைவர்களுக்கு அதிக ஆதரவு உள்ளது. மாநில அரசுகளை பற்றிய மக்களின் எண்ணம் என்ன, பிரதமர் மோடி பற்றி கருத்து என பல அம்சங்கள் இந்த கருத்துக் கணிப்பில் கேட்டப்பட்டுள்ளது.
பதிலளித்தவர்களிடம், பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடு குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்கப்பட்டது.
அதற்கு பிரதமர் மோடி தனது வேலையை சரியாக செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் லாக்டவுன்களால் மோசமான பொருளாதார மந்தநிலை போன்ற தீவிர கவலைகள் மக்களிடம் உள்ளன.
அதிக பணவீக்கம், வேலையின்மை, வருமானம் குறைதல் மற்றும் பொருளாதாரம் கவலைக்குரியதா என மக்களிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பிரதமர் மோடியின் இரண்டாவது பதவிக்காலத்தின் மூன்றாவது ஆண்டு மற்றும் தொற்றுநோய்க்கு இரண்டு ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், பெரும்பான்மையான இந்தியர்கள் பொருளாதாரத்தை மத்திய அரசு கையாள்வதில் தொடர்ந்து நம்பிக்கை வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், அதிக பணவீக்கம், வேலைகள் இல்லாமை மற்றும் வருமானம் குறைந்து வருதல் ஆகியவை குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.
இந்திய ஜனநாயகத்தின் தற்போதைய நிலை குறித்தும் வாக்காளர்களிடம் கேட்கப்பட்டது. பதிலளித்தவர்களில் 43 சதவீதம் பேர் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது என்று கூறியுள்ளனர்.
கோவிட்-19 இன் மூன்றாவது அலை இந்தியா முழுவதும் பரவி வருவதால், இந்தியாவின் தடுப்பூசி இயக்கம் குறித்தும், தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தை இது ஒருங்கிணைத்ததா என்றும் வாக்காளர்களிடம் கேட்கப்பட்டது.
பதிலளித்தவர்களில் பெரும்பாலோர் மத்திய அரசின் தடுப்பூசி இயக்கம் மற்றும் கோவிட் முயற்சிகளைப் பாராட்டியுள்ளனர். தொற்றுநோயை சிறப்பாக கையாண்டதற்காக மாநிலங்களில் ஒடிசா அதிக மதிப்பெண்களைப் பெற்றுள்ளது.