ட்விட்டரில் அதிகம் பின்தொடரப்படும் உ.பி. தலைவராக யோகி: சட்டப்பேரவை தேர்தலில் முன்னணி வகிக்கும் பாஜகவின் இணைய வழிப் பிரச்சாரம்

ட்விட்டரில் அதிகம் பின்தொடரப்படும் உ.பி. தலைவராக யோகி: சட்டப்பேரவை தேர்தலில் முன்னணி வகிக்கும் பாஜகவின் இணைய வழிப் பிரச்சாரம்
Updated on
1 min read

புதுடெல்லி: உ.பி. அரசியல்வாதிகளின் ட்விட்டர் கணக்குகளில் அதிகம்பேர் பின்தொடரும் தலைவராக முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளார். பாஜகவின் முதல்வர் வேட்பாளரான இவரை 17 மில்லியன் பேர் தொடருகின்றனர்.

இதன் மீதான ஒரு புள்ளிவிவரத்தை ’போல்ஸ்ட்ராட்’ எனும் சமூகவலதளப் பிரச்சாரம் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன் சார்பில் ட்விட்டரில் முதல்வர் யோகிக்கு முதலிடம் கிடைத்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

உ.பி.யின் மற்ற தலைவர்களுக்கு முதல்வர் யோகியைவிட பல லட்சங்களின் எண்ணிக்கையில் பிந்தங்கியிருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, அடுத்த நிலையில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்சிங் யாதவை 15.5 மில்லியன் பேர் ட்விட்டரில் பின் தொடருகிறார்கள்.

உ.பி.யின் முக்கிய எதிர்கட்சியான சமாஜ்வாதியின் முதல்வர் வேட்பாளராக அகிலேஷ்சிங் உள்ளார். இதனால், அகிலேஷுக்கு ட்விட்டரில் பின்தொடருவோர் அதிகரிப்பதாகவும் தெரிகிறது.

இந்த இருவர் அளவிற்கு காங்கிரஸின் உ.பி. தேர்தல் பொறுப்பாளரான பிரியங்கா வத்ராவிற்கு ட்விட்டரில் ஆதரவு இல்லை. அக்கட்சியின் தேசியப் பொதுசெயலாளருமான பிரியங்காவை 4.3 மில்லியன் எண்ணிக்கையினரே ட்விட்டரில் தொடருகின்றனர்.

பிரியங்காவை விட மிக அதிகமான அளவில் பகுஜன் சமாஜ் தலைவரான மாயாவதி பின் தங்கியுள்ளார். முன்னாள் முதல்வருமான மாயாவதியின் ட்விட்டர் கணக்கில் 2.3 மில்லியன் பேர்கள் மட்டுமே பின் தொடருகின்றனர்.

சமூகவலதளங்களில் முக்கியமானக் கருதப்படும் ட்விட்டர் கணக்கில் முதல்வர் யோகி கடந்த செப்டம்பர் 2015 இல் இணைந்திருந்தார். அப்போது முதல் தொடர்ந்து ட்விட்டரில் அவர் பிரபலமாகி வருகிறார்.

உ.பி.யின் தலைவர்களில் இவருக்கு பின் சமாஜ்வாதியின் தலைவர் அகிலேஷ்சிங் ஜூலை2009 இல் இணைந்தார். இவருக்கும் பின்பாக பகுஜன் சமாஜின் தலைவியான மாயாவதியும் ட்விட்டரில் இணைந்தார்.

உபியின் சட்டப்பேரவை தேர்தல், பிப்ரவரி 14 இல் துவங்கி மார்ச் 7 இல் முடிவடைகிறது. இதன் 403 தொகுதிகளின் முடிவுகளும் மார்ச் 10 இல் வெளியாக உள்ளன.

இந்த தேர்தலுக்கான நேரடிப் பிரச்சாரம் மத்திய தேர்தல் ஆணையத்தால் ஜனவரி 22 ஆம் தேதி வரை தடை செய்யப்பட்டுள்ளது. இதனால், சமூகவலைதளங்கள் மற்றும் கானொலிகள் மூலமாக உபியின் தேர்தல் பிரச்சாரங்கள் தொடர்கின்றனர்.

இப்பிரச்சாரங்களில் உபியில் ஆளும் பாஜக முதலிடம் வகிக்கிறது. இக்கட்சியின் சமூகவலைதளப் பிரிவிற்காக சுமார் ஒன்றரை லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். சமாஜ்வாதி உள்ளிட்ட மற்ற கட்சிகளுக்கு சில ஆயிரம் எண்ணிக்கையில் மட்டுமே சமூகவலைதளப்பிரிவினர் இருப்பதும் பின்னடைவிற்கு காரணமாகி விட்டது.

எனினும், பின் தங்கிய மாநிலங்களில் பட்டியலில் தொடரும் உபியில் இன்னும் முழுமையான இணையதளம் தொடர்புகள் அமைக்கப்படவில்லை. இதனால், இன்னும் பல உபிவாசிகளுக்கு அதன் அரசியல் கட்சிகளின் டிஜிட்டல் பிரச்சாரம் போய் சேராத நிலையே உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in