

மும்பை தாக்குதலுக்கு பின் இன்போசிஸ் போன்ற தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கும் மத்திய துணை ராணுவப் படையின் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஹரித்வாரில் உள்ள யோகா குரு ராம்தேவின் உணவு பொருள் தொழிற்சாலை பூங்காவுக்கும் தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக கூறப்படுவதால், நேற்று முதல் அதன் பாதுகாப்புக்காக சிஐஎஸ்எப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இதற்கான செலவுத் தொகையை (ஓர் ஆண்டுக்கு ரூ.40 லட்சம்) ராம்தேவ் நிறுவனம் தான் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.