

இந்திரா காந்தி தேசிய கலை மையத்தின் நிர்வாகிகள் மாற்றப்பட்டு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய கலாச்சார துறையின் கீழ் தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பாக இந்திரா காந்தி தேசிய கலை மையம் செயல்படுகிறது. அதன் தலைவர் மற்றும் 19 நிர்வாகிகள் மாற்றப்பட்டு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தி பத்திரிகை துறையின் மூத்த செய்தியாளர் பகதூர் ராய் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மையத்தின் 19 உறுப்பினர்களில் பத்மா சுப்பிரமணியம் மட்டும் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். இதர 18 உறுப்பினர்களுக்கு பதிலாக புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.