பட்டினிச்சாவுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

பட்டினிச்சாவுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: நாட்டில் பட்டினிச்சாவுகளே இல்லையா எனக் கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், மத்திய அரசு சார்பில் அண்மையில் எடுக்கப்பட்ட பட்டினிச்சாவுகள் தொடர்பான விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

பட்டினிச்சாவு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளை முற்றிலுமாக அகற்ற சமுதாய உணவகங்களை அமைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா மற்றும் ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜராகியிருந்த தலைமை வழக்கறிஞர்

கே.கே.வேணுகோபாலிடம், நாட்டில் பட்டினிச்சாவுகளே ஏற்படவில்லையா எனக் கேள்வி எழுப்பி, மத்திய அரசு சார்பில் அண்மையில் எடுக்கப்பட்ட அண்மையில் எடுக்கப்பட்ட பட்டினிச்சாவுகள் தொடர்பான விவரங்களை அறிக்கையாக தாக்கல் உத்தரவிட்டனர். மேலும் பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளை போக்கும் வகையில் சமுதாய உணவகங்களை அமைப்பதற்கான மாதிரி திட்டத்தை மத்திய அரசு உருவாக்கி அதனை மாநில அரசுகள் செயல்படுத்தும் வகையில் விட வேண்டும் என உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு விசாரணையின்போது, பட்டினிச்சாவுகள், ஊட்டச்சத்து குறைபாடுகள் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து மாநில அரசுகள் இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜராகியிருந்த தலைமை வழக்கறிஞர், எந்த மாநிலத்திலும் பட்டினிச்சாவுகள் ஏற்பட்டதாக தகவலம் தெரிவிக்கப்படவில்லை என கூறினார். அப்போது நீதிபதிகள், அப்படியென்றால் நாட்டில் பட்டினிச் சாவுகளே இல்லை என கூறுகிறீர்களா என கேள்வி எழுப்பி, தமிழகத்தில் 5 வயது சிறுவன் பட்டினியால் உயிரிழந்ததாக செய்திகள் வெளியானதை சுட்டிக்காட்டினர்.

இந்த விவகாரத்தை மனிதர்களின் பிரச்சினையாக உணர்ந்து, மத்திய அரசு சமுதாய உணவகங்களை அமைப்பதற்கான மாதிரி திட்டத்தை உருவாக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in