அகஸ்டாவெஸ்ட்லேண்ட் நிறுவனத்தை கறுப்பு பட்டியலில் காங். சேர்த்ததா? - பாதுகாப்பு அமைச்சர் பாரிக்கர் சவால்

அகஸ்டாவெஸ்ட்லேண்ட் நிறுவனத்தை கறுப்பு பட்டியலில் காங். சேர்த்ததா? - பாதுகாப்பு அமைச்சர் பாரிக்கர் சவால்
Updated on
1 min read

“ஹெலிகாப்டர் நிறுவனமான அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறு வனத்தை காங்கிரஸ் ஆட்சியின் போது கறுப்பு பட்டியலில் வைத் திருந்தோம். பாஜக தலைமை யிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் கறுப்பு பட்டியலில் இருந்து அந்த நிறுவனத்தை நீக்கிவிட்டது” என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியது.

இதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், டெல்லியில் நேற்று கூறியதாவது:

கறுப்பு பட்டியலில் அகஸ்டாவெஸ்ட்லேண்ட் நிறுவனத்தை சேர்த்ததற்கான அரசு உத்தரவை காங்கிரஸ் கட்சியால் காட்ட முடியுமா? எந்த தேதியில் அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது? அதற்கான உத்தரவு நகலை காட்டுங்கள். இந்தப் பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் விரிவாக பேசுவோம். இந்த வழக்கு தொடர்பான இத்தாலி நீதிமன்றத்தின் உத்தரவு மத்திய அரசுக்கு வந்துள்ளது.

அந்த ஆவணங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் பணி நடைபெறுகிறது. அதற்கு 8 முதல் 10 நாட்கள் பிடிக்கும்.

இவ்வாறு பாரிக்கர் கூறினார்.

இதற்கிடையில், பாஜக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை 3-ம் தேதி சில நிறுவனங்களை கறுப்பு பட்டியலில் சேர்த்து மத்திய அரசு உத்தரவு வெளியிட்டுள்ளது. அதில், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் இன்டர்நேஷனல் லிமிடெட் (இங்கிலாந்து), பின்மெக்கானிகா (இத்தாலி), இவற்றின் மற்ற நிறுவனங்கள், ஐடிஎஸ் துனிசியா, இன்போடெக் டிசைன் சிஸ்டம் மொரீஷியஸ் ஆகிய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in