தவறான சிகிச்சை அளித்த கர்நாடக மருத்துவர்கள்: 3 பேருக்கு 2 ஆண்டு வரை சிறை தண்டனை

தவறான சிகிச்சை அளித்த கர்நாடக மருத்துவர்கள்: 3 பேருக்கு 2 ஆண்டு வரை சிறை தண்டனை
Updated on
1 min read

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பீதரை சேர்ந்த சாம்பவதி காலப்பா (40) கடந்த 2014 அக்டோபரில் சுஷ்ருத் மருத்துவமனையில் கருப்பை நீக்க அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவர் கள் ராஜஸ்ரீ, வைஜநாத் பிரடர் ஆகியோர் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். அவரது உடல்நிலை மோசமான‌தால் ராஜேந்திர பாட்டீல் மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு சாம்பவதிக்கு மருத்துவர் ராஜேந்திர பாட்டீலும், செவிலியர் விமலாவும் சிகிச்சை அளித்தனர். அப்போது வென்டி லேட்டர் வேலை செய்யாததால் சாம்பவதி இறந்தார். அதை மறைத்து 48 மணி நேரம் சிகிச் சை அளித்துள்ளனர். பின்னர் அவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனை நடத்திய பிறகு பீதர் மாவட்ட அமர்வு நீதி மன்றத்தில் உறவினர்கள் வழக்கு தொடுத்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் காதர், சிகிச்சையில் அலட்சியமாக இருந்த மருத்துவர்கள் ராஜ, வைஜநாத்துக்கு தலா 2 ஆண்டு சிறை, மருத்துவர் ராஜேந்திர பாட்டீல், செவிலியர் விமலாவுக்கு தலா 6 மாத சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in