

டெல்லியைத் தலைமை யிடமாகக் கொண்ட சூப்பர்டெக் நிறுவனம், நொய்டாவில் கட்டிய 40 தளங்கள் கொண்ட 2 மாடி கட்டிடங்கள் விதிகளை பின்பற்றி கட்டப்படவில்லை என்று வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கில் சூப்பர்டெக் கின் இரட்டைக் கோபுரங்களைத் தகர்க்க கடந்த 2014-ம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.
இதையடுத்து, கட்டிடத்தைத் தகர்க்கும் பொறுப்பு மும்பையை சேர்ந்த எடிஃபைஸ் இன்ஜி னீயரிங் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி இந்நிறுவனம் தகர்ப்புப் பணியை மேற்கொள்ள உள்ளது.