Published : 17 Jan 2022 06:56 AM
Last Updated : 17 Jan 2022 06:56 AM

உ.பி. தேர்தலில் ‘அதிர்ஷ்ட எண் 7' - அரசியல் கட்சிகள் நம்பிக்கை

லக்னோ: உத்தர பிரதேசத்தில் பிப்ரவரி 10, 14, 20, 23, 27, மார்ச் 3, 7 ஆகிய தேதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக பாஜக எம்.பி. சஞ்சய் சேத் கூறியதாவது: பிரம்மனின் நேரடி வழித்தோன்றல்களான சப்த ரிஷிக்கள் 7 பேர். வானவில்லில் சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, நீலம், கருநீலம், ஊதா ஆகிய 7 வர்ணங்கள் உள்ளன. சரிகமபதநி என்பது இசையின் 7 ஸ்வரங்கள். கடந்த 2017 சட்டப்பேரவைத் தேர்தல், 2019 மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டன. இந்த தேர்தல்களில் பாஜக அமோக வெற்றி பெற்றது.

தற்போதைய தேர்தலும் 7 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. எனவே 7-ம் எண்ணை அதிர்ஷ்டமாக கருதுகிறோம். வரும் தேர்தலில் 300-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் செய்தித் தொடர் பாளர் அசோக் சிங் கூறும்போது, "சப்த ரிஷிக்கள் 7 பேரின் ஆசி காங்கிரஸுக்கு உள்ளது. 7-ம் எண்ணை காங்கிரஸின் அதிர்ஷ்டமாக கருதுகிறோம்" என்று தெரிவித்தார்.

சமாஜ்வாதி துணைத் தலைவர் சுரேந்திர வஸ்தவா கூறும்போது, "7-ம் எண்ணை எங்களது அதிர்ஷ்ட எண்ணாக கருதுகிறோம். கடைசி கட்ட தேர்தல் 7-ம் தேதி நடைபெறுகிறது " என்று தெரிவித்தார்.

ராமர் சேவை அறக்கட்டளை யின் ஒருங்கிணைப்பாளர் அசு தோஷ் கூறும்போது, "உத்தர பிரதேசத்தில் மொத்தம் 403 தொகுதிகள் உள்ளன. இதன் கூட்டுத் தொகை 7 ஆகும். உத்தர பிரதேச தேர்தலுக்கும் 7-ம் எண்ணுக்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x