

புதுடெல்லி : இந்தியாவில் கரோனா வைரஸ் பரவலைக் கணக்கிடும் ஆர்-வேல்யு திடீரென ஜனவரி 7 முதல் 13ம் தேதி வாரத்தின்படி குறைந்துள்ளது.இது கடந்த இரு வாரங்களைவிட குறைவு என்று சென்னை ஐஐடி ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆர்-வேல்யு எண்ணில் 1-க்கு குறைவாக இருந்தால்தான் கரோனா பரவல் குறைவாக இருக்கிறது. 1 அல்லது அதிகமாகச் செல்லும்போது, கரோனா பரவல் வேகம் அதிகரி்க்கிறது, அதாவது தொற்றுள்ள ஒருவர் மூலம் எத்தனை பேருக்கு பரவுகிறது என்பதைக் குறிக்கும்.
இந்தியாவின் ஆர்-வேல்யுவை அடிப்படையாக வைத்து சென்னை ஐஐடியின் கணித்ததுறை கரோனா பரவல் குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
சென்னை ஐஐடியின் கணிதத்துறை, கணிணி கணிதவியல் மற்றும் புள்ளிவிவர அறிவியல் பிரிவின் பேராசிரியர்கள் நீலிஷ் எஸ் உபாத்யாயே,எஸ் சுந்தர் ஆகியோர்தலைைமயிலான குழு இணைந்து இந்தஆய்வை நடத்தின.
இதன்படி “ கடந்த 2 வாரங்களுக்கு முன் இந்தியாவில் இருந்த ஆர்-வேல்யு ஜனவரி 7 முதல் 13ம் தேதி வாரத்தில் இல்லை, மாறாக ஆர்-வேல்யுகுறைந்துள்ளது. மும்பையில் 1.3, டெல்லியில் 2.5, சென்னையில் 2.4, கொல்கத்தாவில் 1.6 என்ற அளவில் இருக்கிறது. ஆனால் கடந்த ஆண்டு டிசம்பர் 25 முதல் 31ம் தேதி 2.9 என்ற அளவிலும், 2022 ஜனவரி1 முதல் 6வரை ஆர்வேல்யு 4 என்ற அளவிலும் இருந்தது.
ஆனால், கடந்த இருவாரங்களில் இல்லாத அளவு ஆர்-வேல்யு பல்வேறு நகரங்களில் குறைந்துள்ளது. இதன் மூலம் தொற்றின் வேகம் குறையத் தொடங்கியுள்ளது எனத் தெரிவித்துள்ளது.
ஆனால், இந்தியாவில் கரோனா தொற்று கடந்த 24மணி நேரத்தில் 2.71 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், ஒமைக்ரான் தொற்று 7 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் ஒமைக்ரான் பரவல் 28 சதவீதம் அதிகரித்து, 1,702 பேர் பாதி்க்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.