

திருப்பதியில் நடைபெற்ற தேசிய கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு பதக்கங்களையும், பரிசுகளை யும் வழங்க கடந்த 9-ம் தேதி, நகராட்சித் துறை அமைச்சர் பி.சத்யநாராயணா வந்திருந்தார். ரேணிகுண்டா விமான நிலையம் வந்த அவரை, திருப்பதி எம்எல்ஏ கருணாகர் ரெட்டியின் மகனும், திருப்பதி நகராட்சியின் துணை மேயருமான அபிநய் ரெட்டி மற்றும் அவரது ஆதரவாளர்கள் வரவேற்க விமான நிலையம் சென்றனர்.
அங்கு, பாதுகாப்பு கருதி அவர்களை விமான நிலையத்திற்குள் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இதனை தொடர்ந்து மறுநாள் முதல், ரேணிகுண்டா பகுதியில் உள்ள குடியிருப்பில் வசித்து வரும் விமான நிலைய அதிகாரிகளின் வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது.
இந்த தகவல் மத்திய விமானத் துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவின் காதுகளுக்கு எட்டியது. உடனே விசாரணை நடத்த சென்னை விமான நிலைய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி சென்னையில் இருந்து நேற்று அதிகாரிகள் ரேணிகுண்டாவில் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையில் குடிநீர் பைப் லைனில் பிரச்சினை இருந்ததால், 3 நாட்கள் வரை தண்ணீர் நிறுத்தப்பட்டதாக வும், பிரச்சினை தீர்க்கப்பட்டுவிட்டதாகவும் மாநக ராட்சி விளக்கம் அளித்து உள்ளது. ஆனால், இது வேண்டுமென்றே செய்யப்பட்ட தாக தெலுங்கு தேசம் கட்சி புகார் தெரிவித்துள்ளது.