Last Updated : 26 Apr, 2016 09:36 AM

 

Published : 26 Apr 2016 09:36 AM
Last Updated : 26 Apr 2016 09:36 AM

ஆனந்த் சர்மா உட்பட 9 பேர் மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவியேற்பு

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா உட்பட, மாநிலங்களவைக்கு தேர்ந் தெடுக்கப்பட்ட 9 உறுப்பினர்கள் நேற்று பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.

மாநிலங்களவையில் காங் கிரஸ் கட்சியின் துணைத் தலைவ ராக உள்ள சர்மா, இமாச்சலப் பிரதேச மாநிலத்திலிருந்து சமீபத் தில் மேலவைக்கு மீண்டும் தேர்ந் தெடுக்கப்பட்டார். இந்நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது பகுதி நேற்று தொடங்கியது. மாநிலங்களவை கூடியதும் ஆனந்த் சர்மா ஆங்கிலத்தில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

அடுத்தபடியாக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரதாப் சிங் பஜ்வா, ஷம்ஷெர் சிங் துல்லோ, பாஜகவைச் சேர்ந்த ஷ்வத் மாலிக் உள்ளிட்டோரும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். இதுபோல மாநிலங்களவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட நரேஷ் குஜ்ராலும் (சிரோமனி அகாலி தளம்) பதவியேற்றுக் கொண்டார். இவர்கள் 4 பேரும் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

அசாம் மாநில காங்கிரஸைச் சேர்ந்த ரிபுன் போரா மற்றும் ரானீ நரா ஆகிய இருவரும் இறைவன் மீது பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். கேரளாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கே.சோம பிரசாத் (மார்க்சிஸ்ட்), திரிபுரா வைச் சேர்ந்த ஜர்னா தாஸ் வைத்யா (மார்க்சிஸ்ட்) ஆகியோரும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். இதில் வைத்யா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.

புதிதாக பதவியேற்றுக் கொண்ட உறுப்பினர்கள் அனை வரும் அவைத் தலைவர் ஹமீது அன்சாரியின் இருக்கை அருகே சென்று அவருடன் கைகுலுக்கினர். அப்போது, தனது சார்பிலும் அவையின் சார்பிலும் புதிதாக தேர்ந்தெடுக் கப்பட்ட உறுப்பினர்களை இதயபூர்வமாக வரவேற்பதாக அன்சாரி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x