

புதுடெல்லி: குடியரசு தின நிகழ்ச்சிகள் வழக்கமாக ஜனவரி 24-ம் தேதி தொடங்கும் நிலையில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாளை உள்ளடக்கி 23-ம் தேதி முதலே கொண்டாட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நமது கலாச்சாரத்தையும், வரலாற்றையும் நினைவுபடுத்தும் வகையில் கொண்டாடும் வகையில் இருக்க வேண்டும் என மோடி அரசு விரும்புகிறது. ஆதலால், வழக்கமாக ஜனவரி 24-ம் தேதி முதல் 29-ம் தேதிவரை குடியரசு தினம் கொண்டாடப்படும் நிலையில், இனிமேல் 23-ம் தேதியே தொடங்கப்படும். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் விழா பராக்கிரம திவாஸ் நாளாகக் கொண்டாடப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியப் போராட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற, துணிச்சலான தலைவர்களில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸும் ஒருவர். ஒடிசாவின் கட்டாக் நகரில் கடந்த 1897-ம் ஆண்டு ஜனவரி 23-ம் தேதி பிறந்தார். இவரின் பிறந்தநாளைத்தான் பாராக்கிரம திவாஸ் என்று மத்திய அரசு கொண்டாட உள்ளது.
இது தவிர ஆகஸ்ட் 14-ம் தேதியே பிரிவினை துன்பநாளாக அனுசரிக்கப்படுகிறது. அக்டோபர் 31-ம் தேதி தேசிய ஒற்றுமை நாளாகவும் (வல்லபாய் படேட் பிறந்தநாள்), நவம்பர் 15-ம் தேதி பகவான் பிர்ஸா முண்டா பிறந்தநளை ஜன்ஜாதியா கவுரவ் திவாஸாகவும், நவம்பர் 26-ம் தேதி அரசியலமைப்புச் சட்ட நாளாகவும், டிசம்பர் 26-ம் தேதி வீர பாலதிவாஸாகவும் கொண்டாட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.