Last Updated : 13 Jan, 2022 02:03 PM

 

Published : 13 Jan 2022 02:03 PM
Last Updated : 13 Jan 2022 02:03 PM

உ.பி. தேர்தல் | 18 ஆண்டுகளில் முதல்முறை: யோகி ஆதித்யநாத் அயோத்தியில் போட்டி?

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் | கோப்புப்படம்


லக்னோ: உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அயோத்தி அல்லது கோரக்பூர் ஆகிய தொகுதிகளில் ஏதாவது ஒன்றில் போட்டியிடுவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அயோத்தி தொகுதியில் போட்டியிடுவதற்கு அனைத்து தரப்பிலிருந்தும் ஒப்புதல் கிடைத்துவிட்டது, பாஜக மத்தியக் குழு சம்மதித்தால் ஆதித்யநாத் போட்டியிடுவது உறுதியாகிவிடும். இல்லாதபட்சத்தில் மட்டுமே ஆதித்யாத் தனது சொந்த ஊரான கோரக்பூரில் போட்டியிடுவார்.

உத்தரப்பிதேசத்தில் உள்ள 403 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. ேதர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்ததில் இருந்து உ.பி.யில் அரசியல் சூடுபிடித்துள்ளது. இதுவரை ஆளும்கட்சியான பாஜகவிலிருந்து 7எம்எல்ஏக்கள் விலகியுள்ளதால், அதிர்ச்சியடைந்துள்ளது.

இந்த சூழலில் முதல்வர் யோகி ஆதித்யநாத் முதல் முறையாக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட உள்ளார் உ.பி. அரசியலைப் பொறுத்தவரைகடந்த 18 ஆண்டுகளாக முதல்வராக இருந்த அகிலேஷா யாதவ், மாயாவதி, ஆதித்யநாத் ஆகிய பேருமே மக்களை தேர்தல் களத்தில் சந்தித்து போட்டியிட்டு எம்எல்ஏ ஆகவில்லை. மாறாக உ.பியில் மேல்சபை எம்எல்சியாகி அதன் மூலம் முதல்வராகினர்.

இதில் விதிவிலக்காக 2004ம் ஆண்டு கன்னூர் இடைத்தேர்தலில் முலாயம் சிங் யாதவ் போட்டியிட்டு வென்றார். இந்த சூழலில் மக்களைச் சந்தித்து தேர்தலில் போட்டியிட ஆதித்யநாத் தீர்மானித்துள்ளார்.
அந்த போட்டியிடும் பாதுகாப்பாக இருக்க வேண்டுமே என்பதற்காக சங்பரிவாரங்கள் வலுவாக இருக்கும் அயோத்தி தொகுதியையும், தன்னுடைய பிறந்த மண்ணாகிய கோரக்பூரையும் ஆதித்யநாத் தேர்வு செய்துள்ளார்.

அயோத்தியில் ஆதித்யநாத் போட்டியிடுவதற்கு அனைத்து ஒப்புதல்களும் கிடைத்துவிட்டன. பிரதமர் மோடி, அமித் ஷா, ஜேபி நட்டா ஆகியோர் அடங்கிய மத்திய தேர்தல் குழுவினர் ஒப்புதல் கிடைத்தால் உறுதியாகிவிடும்

அயோத்தி என்பது சங்பரிவாரங்களின் கோட்டையாகும், அயோத்தி-பாபர் மசூதி தீர்ப்புக்குப்பின் அங்கு மேலும் வலுவாக பாஜகவும், சங்பரிவாரங்களும் காலூன்றியுள்ளன. அதுமட்டுமல்லாமல் அயோத்தி பிரச்சினை நடந்தபோது, கோரக்பூர் பீடம் ஆதரவாக நின்றது. ஆதித்யநாத்தின் குருநாதர் மகந்த் திக்விஜய் நாத், ராமர் கோயில் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்.

ஒருவேளை அயோத்தியில் ஆதித்நாத் போட்டியிடுவது உறுதியானால், இந்துத்துவாவை இன்னும் வலுவாகபாஜக முன்வைத்து போட்டியிடும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கிறார்கள். அயோத்தி கிடைக்காத பட்சத்தில் மட்டுமே கோரக்பூர் தொகுதியில் ஆதித்யநாத் போட்டியிடுவார்.

உ.பி. அரசியலில் கடந்த 15 ஆண்டுகளாக மாயாவதி(2007-2012) அகிலேஷ் யாதவ்(2012-2017), யோகி ஆதித்யநாத்(2017-2022) ஆகிய 3பேருமே தேர்தலில் போட்டியிடாமலே எம்எல்சியாகி அதன்மூலம் முதல்வராகினர்.

இந்தத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சித் த லைவர் மாயாவதி போட்டியிடமாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல, அகிலேஷ் யாதவும் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஏதும் தெரிவிக்கவில்லை.

பாஜகவின் 24பேர் அடங்கிய முக்கியக் கமிட்டி கடந்த சில நாட்களாக உ.பியில் ஆலோசனை நடத்தி 175 இடங்களுக்கான வேட்பாளர்கள் பட்டியலை உறுதி செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் 113 பேர் அடங்கிய பட்டியல் முதல் இரு கட்டத் தேர்தலுக்கானதாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x