

லக்னோ: பாஜவில் இருந்து 7-வது எம்எல்ஏவும், பிற்படுத்தப்பட்ட சாதித் தலைவருமான முகேஷ் வர்மா இன்று அக்கட்சியில் இருந்து வெளியேறினார்.
தேர்தலுக்கு ஒரு மாதத்திற்குள் உத்தரப் பிரதேசத்தின் ஆளும் கட்சியிலிருந்து மூன்றாவது நாளாக எம்எல்ஏக்கள் வெளியேறியுள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில் 7 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கும் தேர்தல் மார்ச் 7ம்தேதி வரை நடக்கிறது.
இந்த நிலையில், மாநிலத்தின் இதர பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தின் மிக முக்கிய தலைவரான சுவாமி பிரசாத் பாஜகவில் இருந்து விலகினார். தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ஆனந்திபென் படேலுக்கு அனுப்பி வைத்தார். பின்னர் மவுரியா சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவை சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து பாஜக எம்எல்ஏக்கள் 4 பேரும் அகிலேஷ் யாதவை சந்தித்தினர்.
அடுத்த பரபரப்பாக முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அமைச்சரவையில் இருந்து இரண்டாவது அமைச்சரான தாரா சிங் சவுகான் இன்று நேற்று பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
பாஜவில் இருந்து 7-வது எம்எல்ஏவும், பிற்படுத்தப்பட்ட சாதித் தலைவருமான முகேஷ் வர்மா இன்று அக்கட்சியில் இருந்து வெளியேறினார்.
அவர் தனது ட்விட்டர் பதிவில் ‘‘உத்தரபிரதேசத்தில் பிற்படுத்தப்பட்ட சாதியினரை பாஜக புறக்கணிக்கிறது. சுவாமி பிரசாத் மௌரியா ஒடுக்கப்பட்டவர்களின் குரல். அவர் எங்கள் தலைவர்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் பாஜக அரசு தலித்துகள், பிற்படுத்தப்பட்ட சாதியினர், சிறுபான்மையினர் மீது கவனம் செலுத்தவில்லை.’’ எனக் கூறியுள்ளார்.
இதன் மூலம் பாஜகவில் இருந்து விலகிய எம்எல்ஏ எண்ணிக்கை 7- ஆக உயர்ந்துள்ளது. முகேஷ் வர்மா தனது ராஜினாமாவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். பின்னர் அவர் சுவாமி பிரசாத் மவுரியாவின் வீட்டிற்கு சென்றார்.