மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு மீண்டும் கரோனா: வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார்

மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு மீண்டும் கரோனா: வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார்
Updated on
1 min read

புதுடெல்லி: மத்திய தரைவழி போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இது தொடர்பாக அவர் 'கூ' செயலியில், "எனக்கு லேசான அறிகுறிகளுடன் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றி நான் என்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொண்டு சோதனை செய்துகொள்ள வேண்டுகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

முந்தைய அலையில், அமைச்சர் நிதின் கட்கரிக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. அவர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டுள்ளார்.

மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை, பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோர் கரோனா தொற்று ஏற்பட்டு வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளது கவனிக்கத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in