திருப்பதி 2-வது மலைப்பாதையில் 40 நாட்களுக்கு பின் மீண்டும் வாகனங்கள் செல்ல அனுமதி

திருப்பதி 2-வது மலைப்பாதையில் 40 நாட்களுக்கு பின் மீண்டும் வாகனங்கள் செல்ல அனுமதி
Updated on
1 min read

திருமலை: திருமலை மற்றும் திருப்பதி நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரலாறு காணாத வகையில் கனமழை பெய்தது. இதன் காரணமாக, திருப்பதியிலிருந்து திருமலைக்கு செல்லும் 2-வது மலைப்பாதையில் 13 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் இந்த வழித்தடத்தில் முதலில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

அதற்கு பதில், திருமலையில் இருந்து திருப்பதிக்கு வரும்வழித்தடத்திலேயே வாகனங்கள்போகவும், வரவும் அனுமதிக்கப்பட்டன. இதனால் பக்தர்கள் அதிக சிரமத்துக்கு உள்ளாயினர். அதன் பிறகு, திருப்பதி அலிபிரி மலைவழிப்பாதை வழியாக சென்று, லிங்க் சாலை வழியாக திருமலைக்கு செல்ல வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. இதனாலும், சுமார் அரை மணி நேரம் வரை வாகனங்கள் லிங்க் சாலையின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டன.

இதனிடையே சாலை சீரமைப்பு பணிகள் போர்க்கால அடிப்படையியில் இரவும் பகலுமாக நடைபெற்று வந்தன. சென்னை ஐஐடி நிபுணர் குழுவினரின் ஆலோசனையின்படி தற்போது மலைச்சரிவு சரிசெய்யப்பட்டு, பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது வெள்ளோட்டம் நடந்துமுடிந்து, 40 நாட்களுக்கு

பின்னர், நேற்று மதியம் 2.30 மணி முதல் இந்த பாதையில் வாகனங்கள் திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in