நடத்தை விதிகளை மீறியதாக புகார்: தேர்தல் ஆணையத்துக்கு மம்தா பதில்

நடத்தை விதிகளை மீறியதாக புகார்: தேர்தல் ஆணையத்துக்கு மம்தா பதில்
Updated on
1 min read

நடத்தை விதிகளை மீறியதாக தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீஸுக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பதில் அளித்துள்ளார்.

மேற்குவங்கத்தில் 6 கட்டங் களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி நடந்த பிரச்சாரத்தில் பேசிய முதல் வரும் திரிணமூல் காங்கிரஸ் தலை வருமான மம்தா, புதிதாக அசன் சோல் மாவட்டம் உருவாக்கப்படும் என்று உறுதியளித்தார்.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது அரசு தரப்பில் புதிய அறிவிப்புகளை வெளியிடக்கூடாது. அதை மீறி புதிய மாவட்டம் குறித்த அறி விப்பை முதல்வர் வெளியிட்டது நடத்தை விதிமீறல் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

இதுதொடர்பாக உரிய விளக்கம் அளிக்கும்படி முதல்வர் மம்தா பானர்ஜிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு மம்தா அனுப்பிய பதி லில் கூறியிருப்பதாவது: கடந்த 2015 டிசம்பர் 18-ம் தேதி நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அசன் சோல் புதிய மாவட்டம் உருவாக்கு வது குறித்து முடிவு எடுக்கப்பட்டது. இது புதிய அறிவிப்பு அல்ல. ஏற்கெனவே வெளியிடப்பட்ட அறிவிப்பைதான் பிரச்சாரத்தில் குறிப்பிட்டுள்ளேன். இது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் அல்ல.

இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.

மேற்குவங்கத் தேர்தலை யொட்டி அந்த மாநிலம் முழுவதும் இதுவரை 4,192 தேர்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் மிக அதிகபட்சமாக பிர்பும் மாவட்டத்தில் 2,639 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

திரிணமூல்- மார்க்சிஸ்ட் மோதல்

கிழக்கு மிதினாபூர் மாவட்டம் ஹால்டியா பகுதியில் நேற்று ஆளும் திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் மார்க்சிஸ்ட் தொண்டர்களுக்கு இடையே மிகப்பெரிய மோதல் வெடித்தது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார் இருதரப்பையும் சமாதானம் செய்ய முயன்றனர். இந்தச் சண்டையில் 2 போலீஸார் உட்பட 6 பேர் காயம் அடைந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in