கேரளாவில் தேர்தல் பிரச்சாரம் தீவிரம்: அனைத்து கட்சிகளும் வேட்பாளர் பட்டியல் வெளியீடு - அதிமுகவும் பலப்பரீட்சை

கேரளாவில் தேர்தல் பிரச்சாரம் தீவிரம்: அனைத்து கட்சிகளும் வேட்பாளர் பட்டியல் வெளியீடு - அதிமுகவும் பலப்பரீட்சை
Updated on
2 min read

கேரள சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை அனைத்து அரசியல் கட்சிகளும் வெளியிட்டிருப்பதால் அம்மாநிலத்தில் தேர்தல்களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது.

கேரளாவில் மொத்தம் உள்ள 140 சட்டப்பேரவை தொகுதிக்கு வரும் மே 16-ம் தேதி தேர்தல் நடக்க வுள்ளது. இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் முனைப்புடன் காங் கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும், ஆட்சியை பிடிக்கும் நோக்கத்துடன் இடதுசாரி ஜனநாயக முன்னணியும், மாற்றம் ஏற்படுத்தும் கனவுடன் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியும் களமிறங்கியுள்ளன.

இந்த தேர்தலில் எதிர்பார்த்த படியே இடதுசாரி ஜனநாயக முன்னணி வேட்பாளர் பட்டியலை முதலில் அறிவித்து களத்தில் உற் சாகமாக இறங்கியுள்ளது. அடுத்த படியாக தேசிய ஜனநாயக கூட்டணி யும், கடைசியாக முதல்வர் உம்மன் சாண்டி தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனநாயக முன்னணியும் தங்களது வேட்பாளர்கள் பட்டி யலை வெளியிட்டுள்ளன. இதனால் கேரளாவில் சட்டப்பேரவை தேர்தல் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

முதல்வர் உம்மன் சாண்டி தொடர்ந்து 11-வது முறையாக கோட்டயம் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த தொகுதியான புது பள்ளியில் போட்டியிடுகிறார். இது குறித்து அவர் கூறும் போது, ‘‘தேர்தலை சந்திப்பதற்கான அனைத்து அம்சங்களும் தயாராகி விட்டன. கேரளாவில் முதல் முறை யாக மீண்டும் ஆட்சியை தக்க வைக்க தீர்ப்பளிக்க வேண்டும் என மக்களிடம் பிரச்சாரம் செய்யப் போகிறோம். வளர்ச்சியும், பாதுகாப் பும்தான் இந்த தேர்தலில் எங் களுக்கு பக்கபலமாக உள்ளது.’’ என்றார்.

நீடிக்கும் குழப்பம்

அதே சமயம் பிரதான எதிர்க்கட்சி யான இடதுசாரி ஜனநாயக முன் னணியில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது. முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் மற்றும் பொலிட்பீரோ உறுப்பினர் பினராயி விஜயனுக்கு இடையே முதல்வர் பதவிக்கு போட்டி நிலவுவதாக கூறப் படுகிறது.

எனினும் இந்த போட்டி மனப்பான்மை தேர்தலில் பின் னடைவை ஏற்படுத்திவிடக்கூடாது என்பதில் இரு தலைவர்களும் எச் சரிக்கையாக உள்ளனர். அதை வெளிப்படுத்தும் விதமாக வி.எஸ்.அச்சுதானந்தன் கூறும்போது, ‘‘தேர்தல் முடிந்த பின், முறைப்படி தலைவர் யார் என்பதை தேர்ந் தெடுப்போம். அவர்தான் முதல்வ ராக பதவியில் அமர்வார்’’ என்றார்.

புதுதெம்புடன் பாஜக

கடந்த 2011 சட்டப்பேரவை தேர்தலில் வெறும் 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜகவுக்கு இந்த தேர்தல் புது தெம்பை அளித்துள்ளது. ஏனெனில் கடந்த ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் 1,000க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. அந்த உற்சாகத்துடன் இந்த தேர்தலை சந்திக்கவுள்ள பாஜக இம்முறை இரட்டை இலக்க எண்களில் வெற்றி பெற முயற்சித்து வருகிறது.

மேலும் மாறி மாறி ஆட்சியை பிடித்து வரும் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளுக்கு மாற்றான அணியாக உருவாகும் வாய்ப்பையும் பாஜக எதிர்நோக்கியுள்ளது.

இதற்காக கட்சியின் மாநில தலைவர் கும்மனெம் ராஜசேகரன் உள்பட அனைத்து மூத்த தலைவர்களையும் இந்த தேர்தலில் களமிறக்கியுள்ளது.

இதற்கிடையில் அந்தந்த தொகுதிகளில் வேட்பாளர்கள் தங்களது பிரச்சாரத்தை தொடங்கி மக்களை நேரடியாக சந்தித்து வருகின்றனர். காங்கிரஸ் வேட்பாளரும், நகைச்சுவை நடிகருமான ஜெகதீஷ் ஏற்கெனவே தனது தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார்.

இதே போல் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் பாஜக சார்பில் திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார். தனது தேர்தல் பிரச்சாரத்தை இன்று முதல் அவர் தொடங்குகிறார்.

அதிமுகவும் போட்டி

கேரள அரசியலில் இந்த மூன்று முக்கிய முன்னணிகளை தவிர, அதிமுக 7 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மதுபான உரிமையாளர் களுக்கு லஞ்சம் கொடுத்த விவகாரத்தை அம்பலப்படுத்திய பிஜூ ரமேஷ் அதிமுக சார்பில் திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிடுவது அம்மாநில அரசியலில் பெரும் எதிர்பார்ப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in