5 மாநிலத்தில் தேர்தல் ஆணைய தடையால் காணொலி மூலம் காங்கிரஸ் பிரச்சாரம்

5 மாநிலத்தில் தேர்தல் ஆணைய தடையால் காணொலி மூலம் காங்கிரஸ் பிரச்சாரம்
Updated on
1 min read

புதுடெல்லி: உ.பி., பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தராகண்ட் ஆகிய 5 மாநிலங்களில் அடுத்த மாதம் தேர்தல் தொடங்குகிறது. கரோனா வைரஸ் பரவலால் இந்த மாநிலங்களில் வரும் 15-ம் தேதி வரை நேரடி பிரச்சாரம் செய்ய தலைமை தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

இதையடுத்து காணொலி மூலம் பிரச்சாரத்தில் ஈடுபட காங்கிரஸ் கட்சி ‘கிரீன் ரூம்’ ஏற்பாடு செய்து வருகிறது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் டெல்லியில் இருந்தபடியே காணொலி மூலம் பிரச்சாரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அதற்காக டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் தனி அறை அமைக்கப்படுகிறது. மேலும், சோனியா, ராகுல் இல்லங்களிலும் காணொலி காட்சி மூலம் பிரச்சாரம் செய்ய தனி அறை அமைக்கப்படுகிறது.

அத்துடன், தேர்தல் நடைபெறும் மாநில கட்சி அலுவலகத்திலும் மாவட்ட அலுவலகங்களிலும் தனி அறை அமைக்கப்படுகிறது. அங்கிருந்து காணொலி காட்சி மூலம் கட்சி தலைவர்கள் மக்களை தொடர்பு கொண்டு பிரச்சாரம் செய்ய உள்ளனர். தவிர சமூக வலைதளங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in