சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களில் வழங்கப்படும் தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் படம் நீ்க்கம்

பிரதிநிதித்துவப்படம்
பிரதிநிதித்துவப்படம்
Updated on
2 min read

புதுடெல்லி : சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழில் பிரதமர் மோடியின் படம் இருக்காது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன

இந்த மாநிலங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால், தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்குவந்துள்ளதால், தடூப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் படம் இருக்காது

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கும் 7 கட்டங்களாகத் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்து தேர்தல் தேதியை நேற்று அறிவித்தது. இதன்படி, உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் 7 கட்டங்களாக வரும் பிப்ரவரி 10ம் தேதி தேர்தல் தொடங்கி மார்ச் 7ம் தேதிவரை தேர்தல் நடக்கிறது.

மணிப்பூரில் தேர்தல் இரு கட்டங்களாக நடக்கிறது. முதல்கட்டத் தேர்தல் பிப்ரவரி 27-ம் தேதியும், 2-வது கட்டம் மார்ச் 3-ம் தேதியும் நடக்கிறது.

மற்ற 3 மாநிலங்களான உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப் ஆகியவற்றுக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 14் ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. மார்ச் 10-ம் தேதி வாக்கு எண்ணி்க்கை நடக்கிறது.

கோவின் தளத்தில் இந்த 5 மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் படம் இல்லாமல் வழங்கப்படும் வகையில் தேவையான தொழில்நுட்ப மாற்றங்களை மத்தியசுகாதாரத்துறை அமைச்சகம் செய்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட சனிக்கிழமை இரவே இந்த மாற்றத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் செய்துவிட்டதாகத் த கவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில் “ தேர்தல் நடக்கும் மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு தடுப்பூசி சான்றிதழ் வழங்கப்படும்போது பிரதமர் மோடியின் புகைப்படம் இல்லாமல் வழங்கத் தேவையான மாற்றங்கள் கோவின் தளத்தில் செய்யப்பட்டுவிட்டன.

தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துவிட்டதால் இந்த மாற்றம் செய்யப்பட்டது” எனத் தெரிவிக்கின்றன

கடந்த 2021 மார்ச் மாதம் அசாம், கேரளா, தமிழகம், மே.வங்கம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போதும், தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் படம் பதிவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in