டெல்லியில் கிலோ இனிப்பு விலை ரூ.16 ஆயிரம்

டெல்லியில் கிலோ இனிப்பு விலை ரூ.16 ஆயிரம்
Updated on
1 min read

டெல்லியில் தங்க இழை பதிக்கப்பட்ட மிட்டாய் என்ற ஒரு வகை இனிப்பு பலகாரம் ரூ.16 ஆயிரத்துக்கு விற்பனை ஆகிறது.

இந்தியர்களின் உணவு வகைகளில் இனிப்பு பலகாரங்களுக்கு என தனி இடம் உண்டு. அதிலும் வட இந்தியர்களின் தினசரி உணவுகளில் இனிப்புகளுக்கு சிறப்பிடம் உண்டு. இமார்த்தி, ஜிலேபி, காஜு கட்லி, கலக்கண்ட், கீர், மிட்டாய் என அங்கு ஏராளமான இனிப்பு வகைகள் உள்ளன.

அந்த வகையில், டெல்லியின் மவுஜ்பூர் பகுதியில் உள்ள ஒருகடையில் மிட்டாய் என்ற இனிப்புவகை கிலோ ரூ.16 ஆயிரத்துக்கு விற்பனை ஆகி வருவதுதான் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருள் ஆகியுள்ளது. தங்க இழைகள் பதிக்கப்பட்ட மிட்டாய்களே இந்த விலைக்கு விற்கப்படுகின்றன. இவ்வளவு விலை இருந்தாலும், ஏராள மானோர் இந்த இனிப்புகளை ஆர்வமுடன் வாங்கிச் செல்வதாக கடை உரிமையாளர் தெரிவிக் கிறார். தங்க இழைகள் பதிக் கப்பட்டு மிட்டாய் இனிப்பு தயா ரிக்கப்படும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in