125 பயணிகள் தனிமையில் இருக்க மறுத்து பஞ்சாப் விமான நிலையத்தில் ரகளை

125 பயணிகள் தனிமையில் இருக்க மறுத்து பஞ்சாப் விமான நிலையத்தில் ரகளை
Updated on
1 min read

இத்தாலியிலிருந்து ஏர் இந்தியாவிமானத்தில் வந்து கரோனாதொற்றுக்குள்ளான 125 பயணிகள்தனிமையில் இருக்க மறுத்து,விமான நிலையத்தில் ரகளையில்ஈடுபட்டதால் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இத்தாலியிலிருந்து புறப்பட்ட விமானம் 179 பயணிகளுடன் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸுக்கு நேற்று முன்தினம் வந்தது. இவர்களுக்கு ஆர்டிபிசிஆர் சோதனை செய்ததில் 125 பயனிகளுக்கு கரோனோ தொற்று இருப்பது தெரியவந்தது. இதனால்,125 பேரையும் அரசு மருத்துவமனைகளில் தனிமைப்படுத் தலுக்கு உள்ளாகும்படி விமானநிலைய அதிகாரிகள் அறிவுறுத் தினர். அவர்களை அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வாகனங் களும் விமான நிலையம் வந் தடைந்தன.

ஆனால், இதில் எற மறுத்த அப்பயணிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து ரகளையில் இறங்கினர். மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர். இவர்களுக்கு உதவியாக அப்பயணிகளை அழைக்க வந்தஉறவினர்களும் விமான நிலையத்தில் புகுந்து கோஷங்களுடன் ரகளை செய்தனர்.

இதையடுத்து, விமானநிலையத்தின் இயக்குநரான வி.கே.சேத், அந்தப் பயணிகளை, பஞ்சாப் மாநில அரசு அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிட்டார்.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் பயணிகளில் ஒருவரான பிரதீப் குமார் கூறுகையில், ‘நான் எனது 2 குழந்தை களுடன் ஆர்டிபிசிஆர் சோதனை செய்து, கரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழுடன் விமானம் ஏறினேன். பயணம் முடிந்தவுடன் இங்கு செய்யப்பட்ட சோதனையில் 125 பேருக்குகரோனா என்பதை நம்ப முடியவில்லை. எங்களுடன் பயணம் செய்த விமானிகளையும் சோதித்தார்களா? என்று கூடத் தெரியவில்லை. அவர்கள் அனைவரும் தங்களது வீட்டிற்கு உடனடியாக கிளம்பிச் சென்று விட்டனர். எனவேதான் நாங்கள் அரசாங்கத்தின் கீழ் தனிமைப்படுத்துத லுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம்’ என்றார்.

இந்நிலையில், பஞ்சாப் அரசுஅதிகாரிகளிடமும் பயணிகள் தங்களது எதிர்ப்பை காண்பித்தனர். இதனால், வேறு வழியின்றி அவர்களை தங்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கூறி அனுப்பி வைக்கப்பட்டனர். அமிர்தசரஸைச் சேர்ந்த 13 பயணிகள் மட்டும் அரசின் கீழ் தனிமைப்படுத்திக் கொள்ள ஒப்புக் கொண்டு கிளம்பினர். எனினும், அவர்களில் 9 பேர் வழியிலேயே மறுத்து கிளம்பி விட, மீதம் உள்ள 4 பேர் மருத்துவமனைகளிலிருந்தும் தப்பி விட்டனர். இதுபோன்ற எதிர்ப்புகளுக்காக கரோனா பரவல் சட்டத்தின் கீழ் காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் அரசு, யார் மீதும் வழக்குகளை பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in