

ஸ்ரீகாஹஸ்தி: ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் இஸ்ரோ தலைவர் கே.சிவன் நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
பஞ்சபூத திருத்தலங்களில் வாயுத்தலமாக ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் விளங்குகிறது. இங்கு இஸ்ரோ தலைவர் கே.சிவன் நேற்று தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். இக்கோயிலில் ராகு-கேது பூஜை செய்த சிவன் பிறகு மூலவரை வழிபட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “இஸ்ரோ மூலம் செலுத்தப்படும் அனைத்து விண்கலங்களும், முயற்சிகளும் வெற்றிகரமாக அமைய வேண்டும் என சுவாமியை வேண்டிக்கொண்டேன். சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாக செலுத்த இஸ்ரோ நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது” என்றார். கோயிலில் குரு தட்சிணாமூர்த்தி சன்னதி அருகே இஸ்ரோ தலைவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் சுவாமியின் திருவுருவப் படம், பிரசாதங்கள் வழங்கி கவுரவித்தனர்.