

பிரதமர் நரேந்திர மோடியின் கூடுதல் முதன்மை செயலாளராக டாக்டர். பி.கே. மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய அரசு அமைச்சரவைக் குழு இதற்கான ஒப்புதலை அளித்துள்ளது.
ஏற்கெனவே நியமனத்திற்கான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு, இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணியைச் சேர்ந்த டாக்டர். பி.கே. மிஸ்ரா, 1972-ம் ஆண்டு குஜராத் மாநில தொகுப்பைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.