சத்தீஸ்கரில் முஸ்லிம் கடைகளை புறக்கணிக்க கிராமத்தினர் உறுதி: விசாரணைக்கு போலீஸார் உத்தரவு

சத்தீஸ்கரில் முஸ்லிம் கடைகளை புறக்கணிக்க கிராமத்தினர் உறுதி: விசாரணைக்கு போலீஸார் உத்தரவு
Updated on
1 min read

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் சர்குஜா மாவட்டத்தில் கன்டி கலா என்ற கிராமத்தைச் சேர்ந்த மக்கள் முஸ்லிம் கடைகளை புறக்கணிப்போம் என்று உறுதி மொழியேற்கும் வீடியோ வைரலானது.

இது தொடர்பான புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணைக்கு உத்தர விட்டுள்ளனர்.

கடந்த 1-ம் தேதி கன்டி கலா கிராமத்துக்கு பல்ராம்பூர் மாவட்டம் ஆரா என்ற கிரா மத்தைச் சேர்ந்தவர்கள் புத்தாண்டுகொண்டாட வந்துள்ளனர். ஆரா கிராமத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளூர் கன்டி கலா கிராமத் தைச் சேர்ந்தவர்களுடன் மோதலில்ஈடுபட்டுள்ளனர். இருதரப்பினருக்கும் மத ரீதியான மோதல் ஏற்பட்டது.

இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஆரா கிராமத்தைச் சேர்ந்த 6 பேரை கைது செய்தனர். அன்றே அவர்கள் ஜாமீனில் வெளிவந்துள்ளனர். இது கன்டி கலா கிராமத்தினரைக் கொதிப்படையச் செய்துள்ளது. இந்நிலையில், முஸ்லிம் கடைகளைப் புறக்கணிப்போம் என்று கன்டி கலா கிராம மக்கள் உறுதியேற்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். சர்குஜா மாவட்ட கலெக்டர் சஞ்சீவ் ஜா ‘‘சாதாரண புத்தாண்டு கொண்டாடத்தில் உள்ளூர் அளவில் ஏற்பட்ட மோதலுக்கு சிலர் மதச்சாயம் பூசுகின்றனர். இதை அனுமதிக்க முடியாது’’ என்றார்.

துணை போலீஸ் கண்காணிப்பாளர் விவேக் சுக்லா கூறுகையில், ‘‘சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு வெளியில் இருந்து சிலர் கன்டி கலா கிராமத்துக்கு வந்து மக்களை தூண்டிவிட்டு முஸ்லிம்களுக்கு எதிராக உறுதியேற்க வைத்துள்ளனர். அவர்கள் யாரென கிராம மக்களுக்குத் தெரியவில்லை. மக்களை தூண்டி விட்டவர்களை தேடி வருகிறோம். விரைவில் கைது செய்வோம்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in