

‘மன் கீ பாத்’ (இதயத்தில் இருந்து) என்ற தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியில் நேற்று உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி வறட்சி, தண்ணீர் பற்றாக்குறை, கங்கை மற்றும் யமுனை தூய்மை திட்டம் ஆகியவற்றுக்கு அதிக முக்கியத் துவம் அளித்து பேசினார்.
தான் கேட்டுக்கொண்டதற் கிணங்க சமையல் எரிவாயு சிலிண் டருக்கான மானியத்தை விட்டுக் கொடுத்த சுமார் ஒருகோடி பேருக் கும் தனது அரை மணி நேர உரை யின் போது பாராட்டு தெரிவித்துக் கொண்டார்.
மேலும் அவர் உரையாற்றிய தாவது:
தண்ணீர் பற்றாக்குறை மற்றும் வறட்சிக்கு எதிரான போராட்டத் தில் மாநில அரசுகளும் பங்கேற்று பாடுபட்டு வருகின்றன. எனினும் மக்களும் இதற்கான முயற்சியை எடுக்க வேண்டும். மத்தியப் பிரதேச மாநிலம் தேவஸ் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராம பஞ்சாயத்தார் சொந்தமாக முயற்சி எடுத்து 27 குளங்களை வெட்டியுள்ளனர். இதனால் நிலத்தடி நீர் மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. இத் தகைய பணிகளால் நீரின் தரமும் உயரும். மேலும் தூய்மையான நீரால் நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் பெருகும்.
இதே போல் சொட்டு நீர்பாசனம் மூலம் அகமத்நகர் கிராம மக்கள் தண்ணீரை வெகுவாக சேமித் துள்ளனர்.
அடுத்த ஓரிரு மாதங்களுக்குள் பருவமழை தொடங்கிவிடும். இந்த முறை இயல்பை விட 110 சதவீதம் வரை மழை பரவலாக பெய்யும் என வானிலை மையம் கணித் துள்ளது. எனவே நீர்பிடிப்பு பகுதி களில் மழைநீரை சேமிப்பதற்கான பணிகளை மக்கள் இப்பொழுதே தொடங்க வேண்டும். இதற்காக கிராமம் கிராமமாக சென்று விழிப் புணர்வு பிரச்சாரம் நடத்த வேண்டும். அப்போது தான் தற் போதைய வறட்சி நிலை வருங் காலங்களில் ஏற்படாது.
கங்கை தூய்மை திட்டம் என்பது கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. மக்களின் பங்களிப்பு இல்லாமல் இந்த திட்டத்தை வெற்றி பெற வைக்க முடியாது. எனவே தூய்மை விவகாரத்தில் மக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
ஜனநாயகத்தின் ஆணிவேரை வலுப்படுத்த இன்று நாம் கிராம பஞ்சாயத்து தினத்தை கொண்டாடி வருகிறோம். இதனால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் கிடைக்கும். அதை வைத்து கிரா மங்களின் கட்டமைப்பு, பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்தும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைப்பதற்கான விவகாரங்களி லும் அரசு தற்போது முன்னுரிமை அளிக்க தொடங்கிவிட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.