Published : 07 Jan 2022 08:04 PM
Last Updated : 07 Jan 2022 08:04 PM

WHO பட்டியலில் கோவாக்சின் இடம்பெறவில்லை என்பது தவறு - மத்திய அரசு விளக்கம் 

அவசரத் தேவைகளுக்கு பயன்படுத்துவதற்கான உலக சுகாதார நிறுவனத்தின் பட்டியலில் கோவாக்சின் தடுப்பூசி இடம்பெறாதபோதிலும், 15-18 வயதுடையவர்களுக்கான தடுப்பூசி செலுத்துவதற்குரிய வழிகாட்டு நெறிமுறையில் அந்தத் தடுப்பூசி இடம்பெற்றிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் திசைதிருப்பக்கூடியவை என அரசு விளக்கமளித்துள்ளது.

இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:

''அவசரத் தேவைகளுக்காக பயன்படுத்துவதற்கான உலக சுகாதார நிறுவனத்தின் பட்டியலில் கோவாக்சின் தடுப்பூசி இடம்பெறாத போதிலும், 15-18 வயதுடையவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசியை செலுத்த அனுமதி அளிக்கப்பட்டருப்பதாக, சில செய்திகள் வெளியாகியுள்ளது. இதுபோன்ற செய்திகள், முற்றிலும் தவறானவை, திசை திருப்பக்கூடியவை மற்றும் உண்மைக்குப் புறம்பானவை.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தால் தடுப்பூசி வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த நெறிமுறைகளில் எந்த இடத்திலும், உலக சுகாதார நிறுவனத்தின் அவசரத் தேவைகளுக்கான பட்டியல் குறித்து குறிப்பிடப்படவில்லை.

மாறாக, ''15-18 வயதுடையவர்களுக்கான அவசரப் பயன்பாட்டிற்கான பட்டியலில் கோவாக்சின் மட்டுமே இடம்பெற்றுள்ளதால், அதுபோன்ற பயனாளிகளுக்கு, இந்த மருந்து ஒன்று தான் உள்ளது” என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய மருந்துத் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் அவசரப் பயன்பாட்டுக்கான பட்டியலில், 12-18 வயதுடையவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசியைப் பயன்படுத்த, டிசம்பர் 24 அன்று ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக, 15-18 வயதுடைய இளைஞர்களுக்கான தடுப்பூசி செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை, மத்திய சுகாதார அமைச்சகத்தால், டிசம்பர் 27ல் வெளியிடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த நெறிமுறைகளை வேண்டுமானால் சரிபார்க்கலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x