மகாராஷ்டிராவில் 4 நாட்களில் 300+ மருத்துவர்களுக்கு கரோனா: மருத்துவ சேவை பாதிக்கும் அபாயம்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 4 நாட்களில் பல்வேறு மருத்துவமனைகளில் பணியாற்றும், சொந்தமாக க்ளினிக் வைத்திருக்கும் மருத்துவர்களில் 300-க்கும் மேற்பட்டோர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், அம்மாநிலத்தில் மருத்துவ சேவை பாதிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

கரோன 3-வது அலையில் வேகமாகப் பரவலி வரும் ஒமைக்ரான் வைரஸால் நாடு முழுவதும் ஏராளமான முன்களப்பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவி்ல் கடந்த வாரம் வரை 20,000 பேர் வரை மட்டும் நாள்தோறும் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 100 பேராக அதிகரித்துள்ளது. ஒமைக்ரான் எண்ணிக்கையும் 3,000-ஐ கடந்துள்ளது. தற்போது இந்தியாவில் கரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3.71 லட்சமாக அதிகரித்துள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் தினசரி ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 6 மாதங்களுக்குப் பின் தற்போது ஒரு லட்சம் பேர் பாதிக்கப்படுகின்றனர். ஒமைக்ரான் இதுவரை 27 மாநிலங்களுக்குப் பரவி 3,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்; இதில் 1,700 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவர்களில் 50 பேர் கடந்த வாரத்தில் பாதிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் லேசான அறிகுறிகள் இருந்ததால், வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டனர். டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையிலும் 23 மருத்துவர்கள் கடந்த ஒரு வாரத்தில் ரோனாவில் பாதிக்கப்பட்டனர்.

டெல்லி ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் 38 மருத்துவர்கள் உள்ளிட்ட 45 மருத்துவப் பணியாளர்கள் கடந்த வாரத்தில் கரோனாவில் பாதிக்கப்பட்டனர். இதனால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை ஊழியர்களுக்கு அளித்திருந்த குளிர்கால விடுமுறையை உடனடியாக ரத்து செய்து பணிக்கு வர அறிவுறுத்தியது. சண்டிகரில் பிஜிஐஎம்இஆர் மருத்துவமனையில் கடந்த 10 நாட்களில் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உள்பட 196 பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

மகாராஷ்டிராவில் மருத்துவர்களும் கரோனாவில் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்துக்கொள்வதால், மருத்துவச் சேவையில் பெரும் தொய்வு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் தினசரி தொற்றின் அளவும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது, கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 36,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in