மே.வங்கத்தில் 6 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கரோனா அதிகரிப்பு

மே.வங்கத்தில் 6 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கரோனா அதிகரிப்பு
Updated on
1 min read

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் 6 வயதுக்கு உட்பட பல சிறுவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் கரோனா 3-வது அலை ஏற்பட்டுள்ளது. தினமும் ஏராளமானோர் கரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலை யில், கடந்த 5 நாட்களில் 6 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சிறுவர்களுக்கு மூச்சு திணறல், உடல் சோர்வு, காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ள னர். 3 வயதுக்கும் கீழே உள்ள கணிசமான சிறுவர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமையில் இருந்து 15 முதல் 18 வயது வரையிலான சிறுவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப் படுகிறது. அடுத்து, படிப்படி யாக குறைந்த வயதுள்ள சிறுவர் களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும். 6 வயதுக்கு உட்பட்ட குழந்தை களுக்கு இன்னும் தடுப்பூசி செலுத்தப்படவில்லை. எனவே,அவர்கள் எளிதில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் பெரும்பாலான சிறுவர்களுக்கு இதுவரை லேசான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கொல்கத்தா தனியார் மருத்துவ மனை ஒன்றில் 5 சிறுவன்மற்றும் 8 மாதக் குழந்தைக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் குழந்தைகளுக்கும் விரைவில் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றும் மருத்துவர் ஒருவர் தெரிவித்தார்.

- பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in