

பிரபல தாதா சோட்டா ராஜனுக்கு எதிராக மகாராஷ்டிர மாநில திட்டமிட்ட குற்றச் செயல் தடுப்பு சட்டத்தின் கீழ் இரு புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால் சோட்டா ராஜனுக்கு கடும் நெருக்கடி முற்றி வருகிறது.
நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமிடம் இருந்து பிரிந்து சர்வதேச அளவில் போதை பொருள் கடத்தல், கொலை உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த பிரபல தாதா சோட்டா ராஜனை கடந்த ஆண்டு பாலி தீவில் வைத்து இந்தோனேஷிய போலீஸார் கைது செய்தனர். இந்தியாவில் அவருக்கு எதிராக 71 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதால் அங்கிருந்து மகாராஷ்டிராவுக்கு நாடு கடத்தப்பட்டு வந்தார்.
இதையடுத்து மும்பையில் கூலிப்படையினரை ஏவி பத்திரி கையாளர் ஜே.தேவ் கொலை செய்தது தொடர்பாக சோட்டா ராஜன் மீது சமீபத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலை யில், மகாராஷ்டிர மாநில திட்டமிட்ட குற்றச் செயல் தடுப்பு சட்டத்தின் கீழ் மேலும் இரு புதிய வழக்குகளை சிபிஐ நேற்று பதிவு செய்துள்ளது.
மும்பையின் பிரபல பில்டர் அஜெய் கோசாலியா மற்றும் அர்ஷத் ஷேக் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்தது மற்றும் நிலேஷ் என்பவரை மிரட்டி ரூ.20 லட்சம் பணம் பறித்தது ஆகிய குற்றச்செயல்கள் தொடர்பாக சோட்டா ராஜனுக்கு எதிராக இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட் டிருப்பதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.