

கடற்கொள்ளையர்களால் பிணைகைதியாக பிடித்துச் செல்லப்பட்ட இந்திய மாலுமி 40 நாட்களுக்கு பின் பத்திரமாக மீட்கப்பட்டார்.
ஐவரி கோஸ்ட் கடற்பகுதியில் இருந்து கடந்த பிப்ரவரி 11-ம் தேதி 11 இந்திய மாலுமிகளை கடற்கொள்ளையர்கள் பிணை கைதிகளாக பிடித்துச் சென்றனர். அவர்களில் 10 பேரை பிப்ரவரி 19-ம் தேதி நைஜீரிய கடற்படை பத்திரமாக மீட்டு இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது.ரோஹன் என்ற மாலுமியை மட்டும் கடற்கொள்ளையர்கள் விடுவிக்கவில்லை. இதையடுத்து அவரை மீட்பதற்கான நடவடிக் கையை இந்திய வெளியுறவு அமைச்சகம் முடுக்கிவிட்டிருந்தது.
இந்நிலையில், 40 நாட்களுக்கு பின் அவரும் கடற்கொள்ளையர்களிடம் இருந்து நேற்று பத்திரமாக மீட்கப்பட்டதாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நேற்று தன் ‘ட்விட்டர்’ பக்கத்தில் தெரிவித்தார்.