

ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் இறுதி வாதத்தின்போது தெரிவித் துள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில், ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு விசாரணை நடைபெறுகிறது.
நேற்று, கர்நாடக அரசு தரப்பு மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே வாதிட்டதாவது:
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா, ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக ரூ. 55 கோடி சொத்துக் குவித்துள்ளார் என நிரூபித்து தீர்ப்பை வழங்கினார்.
ஆனால் மேல்முறையீட்டில் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி திட்டமிட்டு சொத்து மதிப்பீடுகளை குறைத்து, கணித பிழைகளை செய்து ஜெய லலிதாவை விடுதலை செய்துள் ளார். எனவே குமாரசாமி தீர்ப்பை ரத்து செய்து, நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பை உறுதி செய்ய வேண்டும் என கூறினார்.
அடுத்தகட்ட விசாரணை வரும் 15-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப் பட்டது.
விசாரணையின்போது உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பரமானந்த் கட்டாரியா திடீரென ஆஜராகி, ''சொத்துக்குவிப்பு வழக்கில் மேல் முறையீட்டு மனுக் களை விசாரிக்க உச்ச நீதிமன்றத் துக்கு அதிகாரம் இல்லை. 2 நீதிபதிகள் கொண்ட கர்நாடக உயர் நீதின்ற அமர்வில் மேல் முறையீடு செய்திருக்க வேண்டும். இந்த மனுவை விசாரித்து நேரத்தை வீணடிக்க கூடாது'' என்றார்.
அதற்கு நீதிபதிகள், தனியாக மனு தாக்கல் செய்ய உத்தர விட்டனர்.