என்னை ‘மை லார்டு’ என அழைக்க வேண்டாம்: ஒடிசா தலைமை நீதிபதி வேண்டுகோள்
கட்டாக்: நீதிமன்றங்களில் நீதிபதிகளை ஆங்கிலேயேர் ஆட்சிக் காலத்தில் ‘மை லார்டு’ என்று அழைப்பது வழக்கமாக இருந்தது. அந்த வழக்கம் இன்றும் தொடர்கிறது.
இந்நிலையில், ஒடிசா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.முரளிதர், ‘‘நீதிமன்றத்தில் தன்னையோ தனது தலைமையிலான அமர்வின் மற்ற நீதிபதிகளையோ ‘மை லார்டு’ என்றோ அல்லது ‘யுவர் ஹானர்’ என்றோவழக்கறிஞர்களோ, விசாரணையில் சம்பந்தப்பட்டவர்களோ அழைக்க வேண்டாம். நீதிமன்றநடைமுறைகளுக்கு ஒத்துப்போகும் வகையில் ஐயா (சார்) உள்ளிட்ட வார்த்தைகளால் நீதிபதிகளை அழைப்பது போதுமானது’’ என்று தெரிவித்துள்ளார்.
இதை, ஒடிசா உயர் நீதிமன்றவழக்கறிஞர் சங்க செயலாளர் ஜே.கே.லென்கா வரவேற்றுள்ளார். மூத்த வழக்கறிஞர் புத்ததேவ்ரவுத்ரி கூறுகையில், ‘‘1970-களில்ஒடிசா தலைமை நீதிபதியாக இருந்த காடி கிருஷ்ணா மிஸ்ராநீதிபதிகளை ‘சார்’ என்று அழைக்கலாம் என்று உத்தரவிட்டார். அதை நோக்கிய நடவடிக்கையை இப்போதைய தலைமை நீதிபதி எடுத்துள்ளார்’’ என்றார்.
