ஒமைக்ரான் தொற்று பாதிப்பு வைரஸ் காய்ச்சல் போன்றது: உ.பி. முதல்வர் ஆதித்யநாத் கருத்து

ஒமைக்ரான் தொற்று பாதிப்பு வைரஸ் காய்ச்சல் போன்றது: உ.பி. முதல்வர் ஆதித்யநாத் கருத்து
Updated on
1 min read

லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் 15 முதல் 18 வயது வரையிலான சிறுவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர், அவர் கூறியதாவது:

ஒமைக்ரான் தொற்று வேகமாகப் பரவுகிறது. ஆனால், கரோனா 2 -வது அலையுடன் ஒப் பிடுகையில் ஒமைக்ரான் தொற்று வீரியம் குறைவானது. ஒமைக்ரான் பொதுவான வைரஸ் காய்ச்சல் போன்றதுதான். எனினும், எந்த நோய்க்கும் எச்சரிக்கையோடும் முன்னெச்சரிக்கையோடுஇருப் பது அவசியம். ஒமைக் ரான் குறித்து பீதியடையத் தேவையில்லை. வேறு ஏதேனும் நோய் உள்ள வர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும.

உ.பி.யில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மாநிலத்தில் இதுவரை 8 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 3 பேர் குணமடைந்து விட்டனர். மற்றவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 15-18 வயது வரையிலான 1.4 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இதற்காக 2,150 முகாம் கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் 18 வயதுக்கு மேற் பட்ட 20.25 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப் பட்டுள்ளது. இவர்களில் 7.4 கோடி பேருக்கு இரண்டு டோஸ்களும் போடப்பட்டுள்ளது.

இவ்வாறு யோகி ஆதித்யநாத் கூறினார்.

- பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in