Last Updated : 04 Jan, 2022 09:29 AM

 

Published : 04 Jan 2022 09:29 AM
Last Updated : 04 Jan 2022 09:29 AM

காந்தியை சுட்ட கோட்சேவுக்கு ம.பி.யில் ஆதரவு முழக்கம்; தேச விரோத வழக்கில் கைதான சாதுவை விடுவிக்க கோரி பஜ்ரங் தளம் ஆர்ப்பாட்டம்

புதுடெல்லி: மகாத்மா காந்தியை சுட்ட நாதுராம் கோட்சேவுக்கு ஆதரவாக மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் முழக்கம் எழுந்துள்ளது.

மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவுக்கு சில இந்துத்துவா அமைப்பினர் அளிக்கும் ஆதரவு தொடர்வதாகத் தெரிகிறது. கோட்சேவுக்கு ஆதரவு தெரிவித்து கருத்து தெரிவித்து வருபவர்கள் மீது தேசவிரோத வழக்குகள் பதிவான பிறகும் அடுத்தடுத்து சிலர் அதே கருத்தை வலியுறுத்தி வருகின்றனர்.

கடைசியாக கடந்த டிசம்பரில் காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் நடைபெற்ற சாதுக்கள் சபை மாநாட்டில் கோட்சேவுக்கு ஆதரவாக சாது காளிச்சரண் பேசினார். இது தொடர்பாக வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து, காளிச்சரண் மீது சத்தீஸ்கர் காவல் துறை தேச விரோத வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தது.

இந்நிலையில், சாது காளிச் சரணை விடுவிக்க வலியுறுத்தி ம.பி. மாநிலத்தின் இந்தூரில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பஜ்ரங் தளத்தினர் நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் திரண்டனர்.

அப்போது, காவல் துறையினர் முன்பாகவே ‘நாதுராம் கோட்சே ஜிந்தாபாத்’ என ஆதரவு முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதைக்கேட்டு இந்தூர் நகர காவல் துறையினர் அமைதி காத்தனரே தவிர அதற்காக எவர் மீதும் வழக்கு பதிவு செய்யவில்லை. இப்போராட்டத்தில் சத்தீஸ்கரின் காங்கிரஸ் முதல்வர் பூபேந்தர் பகேலுக்கு எதிராகவும் கோஷங் கள் எழுப்பப்பட்டன. முதல்வர் பகேலுக்கு தங்கள் கடவுளான ஹனுமன் நல்லறிவை வழங்க வேண்டும் என அதற்கான மந்திரங்களும் ஓதப்பட்டன.

ஊர்வலம்

முன்னதாக, மாநில பஜ்ரங் தள தலைவர் சந்தீப் குஷ்வாகா தலைமையில் அந்த அமைப் பினர் இந்தூரின் முக்கியப் பகுதியிலுள்ள காந்தி சிலை முன்பிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். இந்தூர் காவல் துறை ஆணையர் அலுவலகம் சென்றவர்கள் அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு அனுப்பும் மனுவை அளித்தனர். இம்மனுவில், சாது காளிச்சரண் மீதான தேச விரோத வழக்கை வாபஸ் பெற்று அவரை விடுதலை செய்யும்படி வலி யுறுத்தப்பட்டிருந்தது.

ம.பி.யில் சில ஆண்டுகளுக்கு முன் மர்மமான முறையில் இறந்த பிரபல சாதுவான பய்யாஜி மஹராஜின் முக்கிய சீடராக காளிச்சரண் கருதப்படுகிறார். பய்யாஜி மஹராஜை பின்பற்றிய வர்கள் தற்போது, சாது காளிச் சரணை பின்பற்றுகின்றனர். இதனால் தனது பலத்தை காட்ட வேண்டி, சாது காளிச்சரண் யோசனையின் பேரில் பஜ்ரங் தளத்தினர் இந்த மாபெரும் ஊர்வலம் நடத்தியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x