

கோவை ஸ்மார்ட் சிட்டியை ஜெர்மனி வடிவமைக்க உள்ளது என்று அந்த நாட்டு சுற்றுச் சூழல், கட்டுமானத் துறை அமைச்சர் குந்தர் அட்லர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் அதிநவீன வசதிகளுடன் 100 நகரங்களை ஸ்மார்ட் சிட்டிகளாக உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதில் முதல்கட்டமாக சென்னை, கோவை உட்பட 20 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இத்திட்டம் தொடர்பாக ஜெர்மனி கட்டுமானத் துறை அமைச்சர் குந்தர் அட்லர் டெல்லியில் நேற்று கூறுகையில், “கேரள மாநிலத்தின் கொச்சி நகரம், ஒடிஷாவின் புவனேஸ்வரம், தமிழகத்தின் கோவை ஆகிய நகரங்களை ஸ்மார்ட் சிட்டிகளாக உருவாக்கும் திட்டத்தை ஜெர்மனி செயல்படுத்த உள்ளது” என்று தெரிவித்தார்.