

மானியத்தை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கு ஏதுவாக, ஆதாருக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்கும் ஆதார் சட்டம் குறித்து மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசு நேற்றைய தேதியிட்டு வெளியிட்ட அறிக்கையில், ‘ஆதார் (நிதி மற்றும் இதர மானியங்களை இலக்குகளுக்கு விநியோகித்தல், சலுகைகள் மற்றும் சேவைகள்) சட்டம் 2016’ என்ற வடிவில் ஆதார் சட்டம் இயற்றப்படுகிறது.
தகுதியுள்ளவர்களுக்கு அரசு மானியங்கள், சேவைகள் என அனைத்து நடவடிக்கைகளும் இந்திய தொகுப்பு நிதியிலிருந்து, ஆதார் அட்டையை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டத்துக்கான மசோதா நிதி மசோதாவாக தாக்கல் செய்யப்பட்டு, கடந்த 16-ம் தேதி நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
ஆதார் எண் பெற்றிடாதவர் களுக்கு மாற்று வழியில் வழங்கப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.