பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் விஜயகாந்தின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்: இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா கருத்து

பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் விஜயகாந்தின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்: இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா கருத்து
Updated on
2 min read

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைத்தால் அவரது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா கூறியுள்ளார். மாநிலங் களவை உறுப்பினரான அவர், தமிழக தேர்தல் குறித்து ‘தி இந்து’வுக்கு அளித்த பேட்டி:

தமிழக தேர்தல் எப்படி இருக்கும்?

தமிழகத்தில் கொள்கை அடிப் படையிலான மாற்று அரசியல் தேவை என்ற குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது. இதற்கு காரணம், திமுக மற்றும் அதிமுக வால் தமிழகத்துக்கு புதிய முன் னேற்றப் பாதை கிடைக்கவில்லை. பெரியார், அண்ணா விட்டுச் சென்ற பாதையை தொடர்வதில் அவர் களுக்கு பின்வந்த இரு கட்சிகளும் தோல்வி அடைந்ததாகவே நான் கருதுகிறேன். இவர்கள் மத்தியில் ஆளும் அரசுகளை சார்ந்தும், இணக்கமாகவும் செயல்பட்டு வந்தார்கள். இதனால் மாநிலத்தின் உரிமைகள் நிலைநாட்டப்படவும் வளர்ச்சி பெறவும் முடியாமல் போனது. மாறாக, ஊழல் குற்றச் சாட்டுகளுக்கு ஆளாகி வழக்கை சந்தித்து வருகின்றனர்.

இலங்கை பிரச்சினை, மீனவர் பிரச்சினை போன்றவற்றுக்கு உரிய தீர்வு காண முடியவில்லை. சாதி அடிப்படையிலான பிரச்சினைகள், விவசாயிகள் தற்கொலை, சாதி ஆணவக் கொலைகள் மற்றும் தலித்துகள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளன. இதனால் தமிழக பொருளாதாரம் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது.

இந்த நிலையில் தமிழகம் விரும் பும் மாற்று அரசியலை அளிப் பதற்கான ஒத்த கருத்துடன், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக ஆகிய கட்சி களின் அணி உருவாகி உள்ளது.

தமிழகத்தில் மாறி, மாறி ஆட்சி செய்து வரும் திமுக மற்றும் அதிமுகவுடன் கூட்டணி வைப்பது கம்யூனிஸ்ட் கட்சிகளின் வழக்கமாக இருந்தது. இந்த முறை அவ்விரண்டு கட்சிகளை யும் ஒதுக்கி விட்டு மக்கள்நலக் கூட்டணி அமைத்ததன் காரணம் என்ன?

இதை வழக்கம் என நாம் கருதக் கூடாது. ஏனெனில், 1952-ல் சென்னை ராஜ்தானியில் நடை பெற்ற தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் நல்லாட்சி அமையும் என்ற நம்பிக்கையும், சூழலும் உருவானது. இதை உடைப் பதற்காகத்தான் காங்கிரஸுடன் சேர்ந்து ராஜாஜி ஒர் அணியை உருவாக்கினார் என்பதும் தமிழக அரசியல் வரலாற்றில் இடம் பெற் றுள்ளது. மக்கள் நலக் கூட்டணியை பொறுத்தவரை இன்றைக்கு தமிழக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக, ஒருமித்த கருத்து கொண்ட 4 கட்சிகளால் உருவான போராட்ட அணி. இது தேர்தல் கூட்டணியாக மாறி இருக்கிறது.

விஜயகாந்தின் தேர்தல் நிலைப்பாடு குறித்து உங்கள் கருத்து?

எங்கள் கட்சியின் மாநிலத் தலைவர்கள் தான் விஜயகாந்தை நேரில் சந்தித்தார்கள். இதில் என்ன விவாதிக்கப்பட்டது என எனக்கு தெரியாது. தேமுதிக ஒரு சுதந்திரமான கட்சி என்ற நிலையில் அவர்கள் அரசியலில் செய்ய வேண்டியது என்ன? தேர்தலில் யாருடன் கூட்டு சேருவது என்பதை முடிவு செய்ய அவர்களுக்கு உரிமை உள்ளது. அவர் மக்கள் நலக் கூட்டணியுடன் வந்தால் நன்றாக இருக்கும் என ஏற்கெனவே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன் மீது விஜயகாந்த் தான் விரைவில் முடிவு எடுக்க வேண்டும்.

அதேசமயம், அவருக்காக நாங்கள் காத்திருக்காமல் எங்கள் பிரச்சாரத்தை தொடர்கிறோம். எங்கள் இரு கட்சிகளின் தேசிய தலைவர்களான சீதாராம் யெச்சூரி, பிரகாஷ் காரத், சுதாகர் ரெட்டி, பிருந்தா காரத், ஆனி ராஜா போன்றவர்களுடன் நானும் தமிழகத்தில் தீவிரப் பிரச்சாரம் செய்ய இருக்கிறேன்.

தனித்து போட்டியிடுவதாக அறிவித்த தேமுதிகவுடன் பாஜக வும், மக்கள் நலக் கூட்டணியும் ஒரேசமயத்தில் பேச்சுவார்த்தை யில் ஈடுபட்டுள்ளதாக கூறப் படுகிறதே?

மதவெறி அரசியலை முன் வைத்து, சமூக நீதிக்கு எதிராக, பெரியார், அம்பேத்கர் கொள்கை களுக்கு எதிராக செயல்படும் கட்சி பாஜக. இதனுடன் விஜயகாந்த் கூட்டணி சேரமாட்டார் என நம்பு கிறேன். ஏனெனில், பாஜகவுடன் அவர் கூட்டணி சேர்ந்தால் அவரது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்.

தமிழகத்தில் ஆளும் அதிமுகவுக்கு எதிரான வாக்குகளை பிரித்து அக் கட்சியை வெற்றி பெற வைக்க மக்கள் நலக் கூட்டணி உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறதே?

இந்தப் புகார் யார் மூலமாகக் கிளப்பப்படுகிறது என்பதை நீங்கள் முதலில் கண்டறிய வேண்டும். இப்படி சொல்வது என்பதே மக்கள் நலக் கூட்டணி தமிழகத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதைக் காட்டுகிறது. எங்கள் கூட்டணியால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் கொண்டவர்கள்தான் இந்தப் பிரச்சாரத்தை கிளப்பு கின்றனர். தமிழக மக்கள் அரசியல் முதிர்ச்சி பெற்றவர்கள். இன்றைக்கு அவர்களுக்கு மாற்று அரசியலுக்கான தேவையும், எதிர்பார்ப்பும் உள்ளதாக நாங்கள் கருதுகிறோம். இதன் அடிப்படை யில் அவர்கள் எங்களுக்கு நிச்சயம் ஆதரவு அளிப்பார்கள் என நம்புகிறோம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in