Published : 02 Jan 2022 02:35 PM
Last Updated : 02 Jan 2022 02:35 PM

டெல்லியில் கரோனா தொற்று அதிகரித்தாலும் மக்கள் அச்சப்பட வேண்டாம்: கேஜ்ரிவால் நம்பிக்கை

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் | கோப்புப்படம்

புதுடெல்லி :புதுடெல்லியில் கரோனா தொற்று அதிகரித்து வந்தபோதிலும் மக்கள் அச்சப்படத் தேவையில்லை, லேசான பாதிப்புதான் ஏற்படுகிறது, மருத்துவமனைக்குக் கூட செல்லத் தேவையில்லை என்று முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மக்களுக்கு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நாளுக்கு நாள் கரோனா பரவலும், ஒமைக்ரான் பாதிப்பும் அதிகரித்து வருகிறது. கடந்த அக்டோபர் மாதத்துப்பின் இந்தியாவில் கரோனா தொற்று 27ஆயிரத்தை எட்டியுள்ளது. ஒமைக்ரான் பாதிப்பும் 1500க்கும் மேல் உயர்ந்துவிட்டது.

டெல்லியிலும் கடந்த சில நாட்களாக பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஜனவரி 1்ம் தேதி நிலவரப்படி ெடல்லியில் 2,716 பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டனர், இதில் 247 பேருக்கு மருத்துவமனை அனுமதி தேவைப்பட்டது. இது டிசம்பர் 30ம் தேதியோடு ஒப்பிடுகையில் 100பேர் கூடுதலாகப் பாதிக்கப்பட்டனர், மருத்துவமனை தேவையும் 20 பேருக்கு மேல் அதிகரித்தது.

ஆக்ஸிஜன், வென்டிலேட்டர் தேவையும் 87 பேருக்கு இருந்த நிலையில் அது 89 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் உள்ளமருத்துவமனைகளில் 88,883 படுக்கைகள் இருக்கும் நிலையில் அதில் 2.5 சதவீதம் நிரப்பப்பட்டு்ள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 11 சதவீதம் மட்டும் காலியாக இருந்தது, 1.80 லட்சம் படுக்கைகள் நிரம்பியிருந்தன.

இருப்பினும் ஒமைக்ரான் பரவல் அச்சம் மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் நிருபர்களுக்கு இன்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

டெல்லியில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது என்றாலும், பாதிக்கப்படுவோருக்கு லேசான அறிகுறிகள்தான் காணப்படுகின்றன, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதும் குறைவு.ஆதலால், மக்கள் அச்சப்படத் தேவையில்லை.

டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகளில் ஒரு சதவீதம் மட்டுமே நோயாளிகள் இருக்கிறாரகள், 99 சதவீதம் காலியாகவே இருக்கின்றன. கடந்த 2-வது அலையோடு ஒப்பிடுகையில் ஒமைக்ரானால் பாதிப்பு குறைவுதான்.

கடந்த டிசம்பரம் 29ம் தேதி 2000 பேர் பாிக்கப்பட்ட நிலையில் ஜனவரி 1ம் ேததி 6 ஆயிரமாக அதிகரி்த்துள்ளது. ஆனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை 262லிருந்து 247ஆகக் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் டெல்லியில் 6,600 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர், 1,150 ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பியிருந்தன

. 145 நோயாளிகள் வென்டிலேட்டரில் இருந்தனர், ஆனால், 5 பேர் மட்டுமே இருக்கிறார்கள். டெல்லியில் கரோனா பாதிப்பு அதிகரித்தாலும், மக்கள் பயப்படத் தேவையில்லை. 6,360பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், இதில் 3100 பேர் கடந்த 24 மணிநேரத்தில் பாதிக்கப்பட்டனர். அனைவருக்குமே லேசான அறிகுறிகள் தான் இருக்கின்றன.

இ்வ்வாறு கேஜ்ரிவால் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x