

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,525 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 27,553 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
ஒமைக்ரான் பாதிப்பைப் பொறுத்தவரை மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 460 பேருக்கும், அடுத்தபடியாக டெல்லியில் 351 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. குஜராத்தில் 136 பேர், தமிழகத்தில் 117 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் 109 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
பெருநகரங்களில் அன்றாட பாதிப்பு அதிகரித்துள்ளது: பெருநகரங்களின் அன்றாட கரோனா பாதிப்பும் அதிகரித்து வருகிறது. டெல்லியில் நேற்று மாலை நிலவரப்படி 2716 பேருக்கு தொற்று உறுதியானது. இது கடந்த ஆண்டு மே மாதத்திற்குப் பின்னர் அதிகமாகும். மும்பையில் 6180 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கர்நாடகாவிலும் ஒரே நாளில் 1033 பேருக்கு தொற்று உறுதியானது.
கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:
கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 27,553
இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 3,48,89,132.
கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 9,249.
இதுவரை குணமடைந்தோர்: 3,42,84,561.
நோயிலிருந்து குணமடைந்தோர் சதவீதம் 98.32% என்றளவில் உள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 284.
கரோனா மொத்த உயிரிழப்புகள்: 4,81,770.
சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 1,22,801.
இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 1,45,44,13,005 கோடி.
இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.