

காஷ்மீரில் அண்மையில் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப் பட்ட தீவிரவாதிக்கு டிஎன்ஏ சோதனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக மாநில காவல்துறை ஐ.ஜி. விஜயகுமார் தெரிவித்தார்.
உயிரிழந்த தீவிரவாதியின் முக அமைப்பானது, ஜெய்ஷ் இ முகமது கமாண்டர் சமீர் தாரின் முகத்துடன் ஒத்துப்போவதால் அவரது டிஎன்ஏ-வை சோதித்து பார்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் டிசம்பர் 30-ம் தேதி போலீஸாருடன் நடந்த என் கவுன்ட்டரில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களை அடையாளம் காணும் பணியில் போலீஸார் ஈடுபட்டிருந்தனர். இதில், ஒரு தீவிரவாதியின் முகமானது, ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைமை கமாண்டர் சமீர் தாரின் முகத்துடன் ஒத்துப் போனது. இவர் 2019-ம் ஆண்டு புல்வாமாவில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்ட தாக்குதலில் தொடர்புடையவர் அப்போது சமீர் தாரை தவிர மற்ற தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்
தற்போது கொல்லப்பட்ட தீவிர வாதி அவராக இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. எனவே இந்த டிஎன்ஏ சோத னைக்கு போலீஸார் ஏற்பாடு செய்து வருகின்றனர். இவ்வாறு காவல் துறை ஐ.ஜி. விஜயகுமார் கூறினார்.-பிடிஐ