மகாராஷ்டிராவில் 10 அமைச்சர்கள், 20 எம்எல்ஏக்களுக்கு கோவிட் 19 தொற்று

மகாராஷ்டிராவில் 10 அமைச்சர்கள், 20 எம்எல்ஏக்களுக்கு கோவிட் 19 தொற்று
Updated on
1 min read

மும்பை: மகாராஷ்டிராவில் மொத்தம் 10 அமைச்சர்கள் மற்றும் 20 எம்எல்ஏக்களுக்கு கோவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவிலிருந்து கடந்த மாதம் முதன்முதலில் அறிவிக்கப்பட்ட ஒமைக்ரான் கரோனா வைரஸ் மாறுபாடு உலகளவில் ஆயிரக்கணக்கான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் ஒமைக்ரான் பரவல் வேகம் பன்மடங்காக அதிகரித்துள்ளது.

இந்தியா உட்பட பல நாடுகளிலும் விமான போக்குவரத்து கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவிலும் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இன்று 1,431 ஆக அதிகரித்துள்ளது.

ஒமைக்ரான் பாதிப்பைப் பொறுத்தவரை மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 454 பேருக்கும், அடுத்தபடியாக டெல்லியில் 320 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் இதுவரை 118 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22,775 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

அஜித் பவார்
அஜித் பவார்

இந்தநிலையில் மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் இதுகுறித்து தெரிவித்துள்ளதாவது:
நோயாளிகளின் மகாராஷ்டிராவில் கோவிட் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் அரசு மேலும் கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்துள்ளது. மக்கள் கடுமையான கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும்.

சமூக இடைவெளி மற்றும் முககவசம் அணிவது கட்டாயம். இதனை உறுதிபட கடைபிடிக்க வேண்டும். மகாராஷ்டிராவில் மொத்தம் 10 அமைச்சர்கள் மற்றும் 20 எம்எல்ஏக்களுக்கு கோவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in