Last Updated : 01 Jan, 2022 07:43 AM

 

Published : 01 Jan 2022 07:43 AM
Last Updated : 01 Jan 2022 07:43 AM

ஜம்மு காஷ்மீர் வைஷ்ண தேவி கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி12 பேர் பலி: 20-க்கும் மேற்பட்டோர் காயம்

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள வைஷ்ணவ் மாதா கோயிலில் மீட்புப்பணிக்காகஅதிகாரிகள் விரைந்த காட்சி | படம் ஏஎன்ஐ


ஜம்மு : ஜம்மு காஷ்மீரில் ரேசாய் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற வைஷ்ணவ் மாதா கோயிலில் இன்று புத்தாண்டு தினத்தன்று சாமி தரிசம் செய்ய பக்தர்கள் அதிக அளவில் சென்றதால் கூட்டநெரிசல் ஏற்பட்டு 12 பேர் உயிரிழந்ததாகவும், 26 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்ன.

ஜம்மு ரேசாய் மாவட்டத்தில் உள்ள கத்ரா நகரில் திரிகுதா மலைப்பகுதியில் 5,200 அடி உயரத்தில் உள்ள வைஷ்வ் மாதா கோயில் புகழ்பெற்றது. குகையில் அமைந்துள்ள வைஷ்ணவ் மாதா கோயிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகை தருவார்கள்.

புத்தாண்டு தினத்தன்று அதிகாலை சாமி தரிசனம் செய்ய ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் இன்று அதிகாலை திரண்டனர். இதனால் கோயிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு குகையிலும் நெரிசல் ஏற்பட்டது.

திடீரென ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வருவதைப் பார்த்த போலீஸாரும், நிர்வாகிகளும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். இந்த கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் 12பேர் உயிரிழந்தனர், 26க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

போலீஸார், தீயணைப்புப் படையினர், கோயில் ஊழியர்கள் இணைந்து மீட்புப்பணியல் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 26 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு, வைஷ்ணவ் தேவி சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பலரி்ன் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. இதுவரை 6 பேரின் சடல்கள் மீட்கப்பட்டுள்ளன, 12 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என மீட்புப்படையினர் தெரிவிக்கின்றனர்.

நரினாவில் உள்ள மருத்துவமனையின் சுகாதார அதிகாரி கோபால தத் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் “ கத்ராவில் உள்ள மாதா வைஷ்ணவ் கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். .

டெல்லி,ஹரியானா, பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவி்க்கின்றன இன்னும் யார் என்பது உறுதிசெய்யவில்லை. காயமடைந்தவர்கள் நரினா மருத்துவமனையில் சிகி்ச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் ”எனத் தெரிவித்தார்

கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்ட இரங்கல் செய்தியில் “ மாதா வைஷ்ணவ் கோயிலி்ல் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்த செய்தி எனக்கு வேதனையைத் தருகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆறுதல்களைதெரிவிக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகள்.

மருத்துவ அதிகாரி கோபால் தத்

உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடாக பிரதமர் நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50ஆயிரமும் வழங்கப்படும். அங்குள்ள சூழல் குறித்து கவர்னர் மனோஜ் சின்ஹா, அமைச்சர் ஜிதேந்திர சிங்கிடம் பேசினேன்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x