காஷ்மீரில் கூட்டணி ஆட்சி அமைக்க மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிபந்தனைகளை ஏற்க பாஜக மறுப்பு

காஷ்மீரில் கூட்டணி ஆட்சி அமைக்க மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிபந்தனைகளை ஏற்க பாஜக மறுப்பு
Updated on
1 min read

காஷ்மீரில் மீண்டும் கூட்டணி ஆட்சி அமைப்பதற்காக மக்கள் ஜன நாயகக் கட்சி (பிடிபி) விதிக்கும் புதிய நிபந்தனைகளை ஏற்க பாஜக மறுத்துள்ளது.

இது தொடர்பாக நவ்ஷெரா தொகுதி பாஜக எம்எல்ஏ ரவிந்தர் ரெய்னா நேற்று கூறியதாவது:

ஜம்மு காஷ்மிரில் மீண்டும் கூட்டணி ஆட்சி அமைக்க பிடிபி கட்சியைச் சேர்ந்த பல உறுப்பினர் கள் விரும்புகின்றனர். இதுதொடர் பாக அவர்கள் பாஜக மூத்த தலை வர்களுடன் பேசி வருகின்றனர். இங்கு தேர்தல் வருவதை அவர்கள் விரும்பவில்லை.

அதேநேரம் பாஜக-பிடிபி கூட்டணி ஆட்சி தொடர்பாக கடந்த ஓராண்டுக்கு முன்பு இருதரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்ட நிபந்தனை அடிப்படையிலேயே மீண்டும் ஆட்சி அமைக்க பாஜக விரும்புகிறது. ஆனால் பிடிபி-யின் தலைவர் (மெகபூபா) புதிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளார். அதை ஒரு போதும் ஏற்க முடியாது.

பிடிபி கட்சியுடனான கூட்டணி முறிந்துவிட்டால், மாநிலத்தில் ஆட்சி அமைப்பதற்கு பாஜகவுக்கு பல வாய்ப்புகள் உள்ளன. அது குறித்து நேரம் வரும்போது தெரி விப்போம். மாநில மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து, பரஸ்பரம் நம்பிக்கை அடிப்படை யில் ஆட்சி அமைக்க வேண்டியது இரு கட்சிகளின் பொறுப்பு ஆகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மெகபூபா ஆலோசனை

புதிய ஆட்சி அமைப்பதில் ஏற் பட்டுள்ள இழுபறி நிலை குறித்து பிடிபி மூத்த தலைவர்களுடன் ஆலோ சனை நடத்த அக்கட்சியின் தலைவர் மெகபூபா திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும் இந்தக் கூட்டத்துக்கான தேதி இன்னும் முடிவாகவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in