Last Updated : 25 Mar, 2016 09:48 AM

 

Published : 25 Mar 2016 09:48 AM
Last Updated : 25 Mar 2016 09:48 AM

ஷீனா போரா கொலை வழக்கில் ஜாமீன் கோரி பீட்டர் முகர்ஜி புதிய மனு

ஷீனா போரா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பீட்டர் முகர்ஜி, இரண்டாவது முறையாக ஜாமீன் கோரி விண்ணப்பித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் பீட்டர் முகர்ஜி தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி நிராகரித்து விட்டார்.

பீட்டர் முகர்ஜி தாக்கல் செய்துள்ள 2-வது ஜாமீன் மனுவில், “குற்றப்பத்திரிகையில் என் மீது சாட்டப்பட்டுள்ள குற்றங்களுக்கு போதிய அடிப்படை இல்லாத நிலையில், தொடர்ந்து காவலில் வைத்திருப்பதற்கு எவ்வித நியாயமும் இல்லை. எனவே, ஜாமீனில் விடுவிக்க வேண்டும். மூத்த குடிமகனான எனக்கு, உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு உள்ளிட்ட உடல் நலப் பிரச்சினைகள் உள்ளன. தொடர்ந்து சிறையில் இருந்தால் உடல் நலம் பாதிக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷீனாவுக்கும், தன் மகன் ராகுல் முகர்ஜிக்கும் இடையே உள்ள உறவுக்கு எதிரானவராக இருந்தது அவர் இக்குற்றத்தில் ஈடுபடக் காரணம் என குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திராணி முகர்ஜியின் கணவரான பீட்டர் முகர்ஜி, ஷீனா போரா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். அவர், மும்பை ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்திராணிக்கு வேறொரு கணவர் மூலம் பிறந்த ஷீனா போரா, 2012-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் பீட்டர் முகர்ஜி தவிர இந்திராணி, அவரின் முன்னாள் கணவர் சஞ்சீவ் கண்ணா, டிரைவர் ஷியாம்வர் ராய் உள்ளிட்டோர் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x