

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பெண்களின் சாதனைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று பாராட்டு தெரிவித்தார்.
இதுகுறித்து மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “சர்வதேச மகளிர் தினத்தில், சாதனை புரிந்த அனைத்து பெண்களையும் வணங்குகிறேன். சமூகத்தில் இன்றியமையாத பங்கு வகிப்பதற்கு நன்றி தெரிவிக்கிறேன்.
மகளை காப்போம், மகளை கற்கச் செய்வோம் திட்டம் முதல் சுகாதாரம், கல்வி வசதிகள் மேம்பாடு வரை பெண்கள் மேம்பாட்டில் எங்கள் அரசு உறுதியான முயற்சி மேற்கொண்டுள்ளது. எங்கள் அரசின் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் முத்ரா வங்கிச் சேவை போன்ற முயற்சிகள் பெண்களை அதிகாரம் பெறச்செய்வதுடன் நாட்டின் வளர்ச்சிக்கு அவர்களின் பங்களிப்பை செய்ய உதவும்” என்று கூறியுள்ளார்.
உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தன் வாழ்த்துச் செய்தியில் “பெண்களுக்கு எதிரான குற்றங் களை கட்டுப்படுத்த சட்டம் மற்றும் அமைப்பு ரீதியிலான கட்டமைப்பை வலுப்படுத்தியுள்ளோம்.பெண் களுக்காக தேசிய அளவில் ‘அவசர கால தொலைபேசி எண் 112’ அறிமுகம் செய்யும் பணிகளை உள்துறை மேற்கொண்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.